ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக

0
123

ஸ்டாலினை ஆட்சியை பிடிக்க விடாமல் மீண்டும் விரட்டியடித்த பாமக

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய அளவில் அதிமுக,பாமக மற்றும் தேமுதிக கூட்டணியான பாஜக 352 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க உள்ளது. எதிரணியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் எதிர்க்கட்சி தகுதியை கூட இழந்து படு தோல்வியை சந்தித்துள்ளது.

பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறியபடி தமிழகத்தில் பாஜக தலைமையிலான மோடியின் மத்திய அரசிற்கு எதிரான மன நிலையால் திமுக 38 தொகுதிகளை கைப்பற்றி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. இதே போல தமிழகமே எதிர்பார்த்திருந்த 22 இடைத்தேர்தலில் திமுக அதிக தொகுதிகளை கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை கவிழ்த்து ஸ்டாலின் தலைமையினாலான திமுக ஆட்சி அமையும் என்றும் திமுக தரப்பினரால் பிரச்சாரம் செய்யப்பட்டது.

எப்படியும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆகி விட வேண்டும் என்று ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் விவசாய மற்றும் கல்வி கடன் தள்ளுபடி மற்றும் பல சலுகைகளை வாரி வழங்கியிருந்தார். தற்போது அதை எப்படி அவர் நிறைவேற்ற போகிறார் என்ற கேள்வி எழுந்தாலும் அந்த வாக்குறுதிகள் மூலம் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று விட்டார்.ஆனால் இடைத்தேர்தல் வெற்றி மூலம் ஆட்சியமைக்க போதுமான இடங்கள் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மத்தியில் காங்கிரஸ் படு தோல்வியை அடைந்ததால் திமுக MP க்கள் அமைச்சராகும் வாய்ப்பையும் இழந்து விட்டார்கள்.

மேலும் படிக்க

தருமபுரி தொகுதிக்கு MP திமுகவின் செந்தில்குமாரா? பாமகவின் அன்புமணி ராமதாசா?

இவ்வாறு மகத்தான வெற்றியை பெற்றும் ஸ்டாலின் நினைத்தது போல எதுவும் நடக்காமல் போனதற்கு முக்கிய காரணமே அதிமுக பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வந்ததால் தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக தான் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று திமுகவினர் பாமகவின் சின்னமான மாம்பழத்தின் மீது பட்டாசு வைத்து வெடித்து தனது கோபத்தை காட்டினர்.

கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தனியாக போட்டியிட்ட பாமக அதிமுக மற்றும் திமுகவிற்கு மாற்றாக பெரும்பாலான இடங்களில் பெரிய அளவில் வாக்குகளை பிரித்ததால் அடிப்படையாகவே அதிக வாக்கு வங்கியை கொண்ட அதிமுக வெற்றி பெற்றது,திமுக தோல்வியடைந்தது. அந்த தேர்தலில் பாமகவால் அதிகமாக பாதிக்கப்பட்டது திமுக தான் அதனால் தான் இந்த முறை மக்களவை தேர்தலுக்கு கூட பாமகவுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலின் விரும்பவில்லை.

துரைமுருகன் உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் ஸ்டாலினிடம் பாமகவின் வாக்கு வங்கியை பற்றியும் அவர்கள் தனியாக நின்றால் திமுக அடையும் பாதிப்பை பற்றியும் தெளிவாக எடுத்து கூறியும் கூட்டணி அமைக்காமல் தவிர்த்து விட்டார். இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட எடப்பாடி பழனிசாமி பாமகவை அதிமுகவின் கூட்டணிக்குள் கொண்டு வந்தார்.

அதிமுக பாமக கூட்டணி அமையும் வரை நம்பிக்கையாக இருந்த ஸ்டாலினுக்கு இது எதிர்பாராத அதிர்ச்சியை கொடுத்தது. அந்த கோபத்தில் தான் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை கூட தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அதே நேரத்தில் வலிமையில்லாமல் இருந்த அதிமுக கூட்டணி பாமக இணைந்ததால் வலிமையடைந்தது.

இடைத்தேர்தல் நடைபெற்ற பெரும்பாலான தொகுதிகளில் பாமகவின் செல்வாக்கு அதிமுகவிற்கு குறிப்பிட்ட அளவு வெற்றியை கொடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை தமிழகத்தில் உறுதி செய்தது. அதே நேரத்தில் இரண்டாவது முறையாக திமுக தலைவர் ஸ்டாலினை ஆட்சியியை பிடிக்க விடாமல் விரட்டியடித்துள்ளது.

author avatar
Parthipan K