தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்

0
123

தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலில் மகாத்மா காந்தியின் முதன்மையான கொள்கையான மதுவிலக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து தன்னுடைய கொள்கையாக கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் கூட தங்களுடைய கட்சியின் சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் தடை உத்தரவை பெற்றார்.

தமிழக அளவிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குகளுக்காக மது விலக்கை பற்றி பேச தயங்கிய சூழ்நிலையிலேயே அரசியலில் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை,மக்கள் நலன் தான் முக்கியம் என தொடர்ந்து மது ஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து போட்டியிட்ட போதும் ஆட்சிக்கு வந்தால் தங்களுடைய முதல் கையெழுத்து மது விலக்கு கொண்டு வருவதற்காக தான் இருக்கும் என வாக்குறுதியளித்தனர்.

இதனையடுத்து தான் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார்.அவரையடுத்து திமுகவும் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை கொண்டு வருவதாக உறுத்தியளித்தது.இவ்வாறு மது ஒழிப்பை பற்றி பேச தயங்கியவர்களையும்,மது உற்பத்தியை தொழிலாக கொண்டவர்களையும் மது ஒழிப்பை பற்றி பேச வைத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இந்நிலையில் இவ்வளவு பெருமைமிக்க தமிழக அரசியல் தலைவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சிறப்பிக்கும் வகையில் மது ஒழிப்பிற்கான அவரது கடந்த கால போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பாமகவினர் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் சிறப்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என்ற ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி அவர்கள் பதிவிட்டது ட்விட்டரில் தேசிய அளவில் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் மது ஒழிப்பு போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி அக்கட்சியினர் பதிவிட்டவைகளில் சில உங்களின் பார்வைக்காக