மக்களவை தேர்தலுக்காக வலிமையான வியூகம் வகுத்த பாமகவை கண்டு தோல்வி பயத்தில் பதறும் திமுக

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சி காலம் முடிவடைவதையடுத்து மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் தேசிய அளவில் தற்போதைய ஆளும் கட்சியான பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் மற்றும் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிட போவது உறுதியாகி உள்ளது.
இதனையடுத்து தேசிய கட்சிகளான பாஜகவும்,காங்கிரஸும் மாநிலக் கட்சிகளை தங்களுடன் இணைத்து தங்களது கூட்டணியை மேலும் வலுப்படுத்த முயற்சிக்கின்றன. இதற்காக தமிழகத்தில் காங்கிரஸ் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது.திமுக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை தேசிய அளவில் மெகா கூட்டணி என்றும் கருத்து கணிப்புகள் வெளியாகி வந்தன.
என்ன தான் ஊடகங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை மெகா கூட்டணி என்று அழைத்தாலும் அதன் தலைவர்கள் அதை நம்பவில்லை.தமிழகத்தில் உள்ள மாற்று கட்சிகள் பாஜக மற்றும் அதிமுகவுடன் இணையும் பட்சத்தில் அது திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை விட வலிமையானதாக உருவாகி விடும் என்ற அச்சத்தில் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த தேர்தலில் தனியாக நின்று 6 சதவீத வாக்குகளை பெற்ற பாமகவை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இணைத்து விட வேண்டும் என்று திமுக மற்றும் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.அதனால் தான் இரு கட்சிக்களுக்கும் இடையே கூட்டணியை உறுதி செய்திருந்தாலும் தொகுதி பங்கீடு எதுவும் முடிவாகாமல் இருந்தது.மேலும் பாமக வந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணியில் வைத்திருக்க முடியாது என்றே அதை கடைசி வரை வெறும் தோழமை கட்சி என்று குறிப்பிட்டு வந்தனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர பலமுறை முயற்சி செய்த போதும் பாமக ஆரம்பத்திலிருந்தே திமுக கூட்டணியில் இணைய விருப்பம் காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் திடீர் திருப்பமாக அதிமுகவுடன் பாஜக மற்றும் பாமக ஒரே நாளில் கூட்டணியை உறுதி செய்து தொகுதி பங்கீடுகளையும் முடித்து விட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக தலைவர் ஸ்டாலின் அந்த கூட்டணியை பற்றி நாகரிகமாக விமர்சனம் செய்வதை விடுத்து விரக்தியின் காரணமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை வயதிலும் அரசியலிலும் மூத்தவர் என்று பார்க்காமல் தான் வகிக்கும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் மதிப்பளிக்காமல் சாதாரண அரசியல்வாதியை போல தரமற்ற வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அரசியலில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று அது மட்டுமில்லாமல் ஒரு கட்சி கூட்டணி வைப்பதும் வைக்காமல் இருப்பதும் அக்கட்சியின் கொள்கை முடிவு என்பதை கூட அறியாமல் தங்களுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து விட்டது என்ற பதற்றத்தில் திமுக தலைமையும் அதன் தொண்டர்களும் புலம்பி வருகிறார்கள்.முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி அளவிற்கு ஸ்டாலின் அவர்களுக்கு அரசியல் புரிதலோ சகிப்பு தன்மையோ இல்லை என அவரது தொண்டர்களே விமர்சனம் செய்து வருகிறார்கள்.

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.