டாக்டர் ராமதாசை அவதூறாக பேசிய திமுகவின் எம்.பி! கொந்தளித்துப் போன பாமக தொண்டர்கள்!

0
76

தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது.

சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டசபை தொகுதியில் விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் பொதுமக்களை சந்திக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிலே திமுகவின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் பங்கேற்று பேசினார் அதில் பேசிய அவர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

திமுகவின் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதை பற்றி எனக்கு தெரியாது அவர்கள் யாரிடம் பேரம் பேசுகிறார்களோ தெரியவில்லை யார் அதிகமாக பணம் கொடுக்கிறார்களோ அவர்களோடு கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். ஏனென்றால், சென்ற முறை நாணுறு கோடி ரூபாய் வாங்கியதாக தெரிவிக்கிறார்கள். இந்த முறை ஆயிரம் கோடி கேட்பதாக சொல்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார். உங்கள் கட்சியானது அதற்கு தயாராக இருக்கின்றதா என்று கேட்டதற்கு எங்களிடம் அவ்வளவு பணம் கிடையாது கொள்கை மட்டும்தான் இருக்கின்றது என்று பதிலளித்திருக்கிறார் தயாநிதி மாறன்.

அதன்பிறகு பூசாரிப்பட்டி சென்ற தயாநிதிமாறன் அவர்களை, அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர் ராமதாஸை பற்றி அவதூறாக சில கருத்துக்களை தெரிவித்ததாக கறுப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள். அதோடு தயாநிதி மாறன் கார் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது .இதனால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறை திமுகவினரின் பாதுகாப்புடன் ரயில் நிலையத்திற்கு வந்த தயாநிதி மாறன் அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில், ராமதாஸ் தொடர்பாக அவதூறாக பேசியதற்காக 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தயாநிதி மாறனுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி சார்பாக வழக்கறிஞர் பாலு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றார்.

அந்த நோட்டீஸில் பாட்டாளி மக்கள் கட்சியைப் பற்றியும், அதனுடைய நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பற்றியும், அவதூறாக சில பொய்யான தகவல்களை வெளியிட்ட திமுகவின் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் அதற்காக 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால் அவர் மீது கிரிமினல், மற்றும் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே மணி எச்சரிக்கை செய்து இருக்கின்றார்.