இதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டிலா பேசினார்? கனிமொழியை வெளுத்து வாங்கிய பாமகவினர்

0
167

இதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டிலா பேசினார்? கனிமொழியை வெளுத்து வாங்கிய பாமகவினர்

பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவுடன் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து குடியரசுத் தலைவரும் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த மசோதா தற்போது சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக ஆதரவாக வாக்களிதுள்ளது.

அதாவது மக்களவையில் அதிமுகவின் ஒரு எம்பியும், மாநிலங்களவையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியான பாமக உள்ளிட்ட கட்சிகளின் 11 எம்பிக்களும் இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தனர். இதனையடுத்து இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் என எழுந்து வருகின்றன. மேலும் பல இடங்களில் போராட்டம் என்ற பெயரில் இந்த சட்டத்தை எதிர்க்கும் நபர்கள் அராஜகத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆரம்பத்தில் இந்த மசோதாவை எதிர்த்து பேசி கொண்டிருந்த திமுக வெளிநடப்பு செய்ததாக தகவல்கள் வெளியாகின. எதிர்த்து வாக்களிக்க வேண்டிய திமுக எம்பிக்கள் வெளி நடப்பு செய்தது ஏன்? அதன் மர்மம் என்ன? என அவர்களுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த பிறகு திமுக எம்பி கனிமொழி இது குறித்து முறையாக விளக்கம் கொடுத்தார். மேலும் இந்த மசோதாவிற்கு ஆதரவளித்து அதிமுக மற்றும் பாமக துரோகம் செய்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது அன்புமணி ராமதாஸை நாங்கள் மாநிலங்களவையில் பார்த்ததே இல்லை. அப்படி தலைமறைவாகவே இருந்த அவர் , அந்த ஒரு நாளில் மட்டும் சரியாக ஆஜராகி அந்த ஒரு வாக்கையும் அநீதிக்கு ஆதரவாகப் போட்டு, குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற வழிவகுத்து துரோகம் செய்துவிட்டுப் போனார்” என்று விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இந்நிலையில் ஈழத்தமிழர்களுக்காக இந்த சட்டத்தை எதிர்க்கும் திமுகவை இது சாத்தான் வேதம் ஓதுவதற்கு சமம் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சித்திருந்தார்.கூடவே இது குறித்து பொது இடத்தில் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்றும் சவால் விட்டிருக்கிறார்.

அடுத்ததாக அன்புமணி ராமதாஸை மாநிலங்களவையில் பார்த்ததே இல்லை என்று திமுக எம்பி கனிமொழி கூறியதை பொய் என்று நிரூபிக்கும் வகையில் பாமக தொண்டர்கள் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசியதை ஆதாரத்துடன் பதிவிட்டு கனிமொழியை கலாய்த்து வருகின்றனர்.

குறிப்பாக சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் நதி நீர் இணைப்பு பற்றி மாநிலங்களவையில் பேசிய வீடியோவை ஆதாரமாக பதிவிட்டு “இதை அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசாமல் டெல்லி பஸ் ஸ்டாண்டில் பேசினாரா? இல்லை திமுகவின் அறிவாலயத்தில் பேசினாரா?” என்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவையில் பேசிய பல வீடியோக்களை பதிவிட்டு தமிழக மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பிய திமுக எம்பி கனிமொழியின் முகத்திரையை பாமகவினர் கிழித்து வருகின்றனர். அவற்றில் சில பதிவுகள்:

author avatar
Ammasi Manickam