முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் குரு ஜெயந்தி விழாவாக கொண்டாடினர்

0

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்தவருமான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் குரு ஜெயந்தி விழாவாக கொண்டாடினர்.

இரண்டுமுறை பாமக சார்பாக தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவரும்,தமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்தவரும்,வன்னியர் சங்க தலைவருமான மாவீரன் என்று பாமகவினராலும் தமிழக மக்களாலும் அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ.குரு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மறைந்தார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் பாமகவிற்கும் இறுதி வரை விசுவாசமாக வாழ்ந்து மறைந்த குருவின் மறைவு பாமகவிற்கும் வன்னியர் சமுதாய மக்களுக்கும் பேரிழப்பாக ஆனது.

இந்நிலையில் ஜெ குருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் பாமக சார்பாக பல்வேறு நிகழ்சிகள் நடத்த தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பாமக விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் சிலர் அவரது பிறந்தநாளில் பாமகவிற்கு எதிராக புதிய அமைப்பை தொடங்குவதாக அறிவித்திருந்தார்கள். இதனால் அந்த பகுதியில் வன்முறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதி குருவின் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

PMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Nadu-News4 Tamil Online Tamil News Website
PMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Nadu-News4 Tamil Online Tamil News Channel

இதனையடுத்து பாமகவினர் அனைவரும் தாங்கள் இருக்கும் பகுதிகளிலேயே மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் சிலை மற்றும் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஜெ.குருவின் 58-ஆவது பிறந்தநாளையொட்டி திண்டிவனம் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சரசுவதி சட்ட கல்லூரியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவச்சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, புதுவை மாநிலப் பொறுப்பாளர் முனைவர் தன்ராஜ் உள்ளிட்ட பாமக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

பாமகவின் இளைஞரணி தலைவரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

PMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Nadu-News4 Tamil Online Tamil News Portal
PMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Nadu-News4 Tamil Online Tamil News Channel

ஜெ.குருவின் 58-ஆவது பிறந்தநாளையொட்டி வன்னியர் சங்கம் சார்பாக பாமக தொண்டர்களும்,நிர்வாகிகளும் பல்வேறு இடங்களில் இரத்த தான முகாம் நடத்தியுள்ளனர்.

மேலும் குரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பென்சில் போன்றவற்றையும் பாமகவினர் வழங்கியுள்ளனர்.

PMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Nadu-News4 Tamil Online Tamil News
PMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Nadu-News4 Tamil Online Tamil News Channel

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.

PMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Nadu

Copy

Leave A Reply

Your email address will not be published.

WhatsApp chat