டாக்டர் ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு! அதிர்ந்துபோன ஆளும் தரப்பு இனி என்ன செய்யப் போகிறது?

0
92

வன்னியர்களுக்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு போராட்டத்தை தீவிரப்படுத்துவது என பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கின்றது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று தெரிவித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

மாநகராட்சி மற்றும் நகராட்சி அதோடு வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக ஒன்று திரண்டு போராட்டம் செய்து மனு கொடுத்திருக்கிறார்கள். இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து அரசு தரப்பிலே எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.. ஆகவே இட ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.

இது குறித்து நாளைய தினம் கட்சியின் உயர்மட்ட குழுவுடன் காணொளி மூலமாக மருத்துவர் ராமதாஸ் ஆலோசனை நடத்த இருக்கிறார். இந்த கூட்டத்திலே இட ஒதுக்கீடு குறித்து பாட்டாளி மக்கள் கட்சி அடுத்து என்ன செய்யலாம் என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னரே மாவட்ட அளவிலான நிர்வாகிகளின் கூட்டம் ஆய்வு நடத்தப்பட்டு அவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதற்கு இட ஒதிக்கீடு பிரச்சனையில் ஒரு தீர்வை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருவதாகவும், ஆகவே அடுத்து முன்னெடுக்கும் போராட்டங்கள் இப்போதையதை விட மிகத் தீவிரமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் கட்சியின் நிர்வாகிகள்.