புயல் முன்னறிவிப்பு பற்றி அன்புமணி ராமதாஸ் அறிக்கையை விமர்சித்தவருக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரத்துடன் தக்க பதிலடி

புயல் முன்னறிவிப்பு பற்றி அன்புமணி ராமதாஸ் அறிக்கையை விமர்சித்தவருக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு ஆதாரத்துடன் தக்க பதிலடி

கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழகத்தை கடும் புயல் மழை தாக்கிய போது சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசித்த மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த சமயத்தில் புயல் வருவதை முன்கூட்டியே கணிக்க தவறிவிட்டதாகவும், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் புயல் வருவதை ஒரு வாரத்திற்கு முன்பே துல்லியமாக கணிக்க தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாகவும் அதை நமது அரசும் பயன்படுத்த வேண்டும் என்று மக்களின் மீதுள்ள அக்கறையால் ஒரு அறிக்கையை ஆளும் அரசுக்கு ஆலோசனையாக பாமகவின் அன்புமணி ராமதாஸ் வழங்கியிருந்தார்.

ஒரு எதிர்க்கட்சியாக குறைகளை மட்டுமே கூறாமல் பிரச்சனைகளை தீர்க்க தீர்வும் கூறிய அவரது அறிக்கையை விமர்சிக்கும் வகையில் குடிமை பணி தேர்விற்கு புவியியல் பாடத்தில் சிறப்பாக பயிற்சியளிக்கும் பிரபல ஐ ஏ எஸ் பயிற்சி மையத்தை சேர்ந்தவர் ஒருவர் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்துள்ளார். அதில் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் உள்ளது போல புயல் வருவதை துல்லியமாக கணிக்க முடியாது எனவும், இது போன்ற அறிக்கைகளை விடுவதற்கு முன்பு புவியியல் பற்றி படித்து விட்டு வரவும் என சில புவியியல் சம்பந்தமான வார்த்தைகளை குறிப்பிட்டுருந்தனர்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒடிசாவை தாக்கிய பானி புயலை அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்தியா செலுத்திய செயற்கைகோள்களின் உதவியுடன் முன்கூட்டியே துல்லியமாக கண்டுபிடித்து பல லட்சம் கணக்கான மக்களின் உயிர்களை காப்பற்றியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல அதி நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டு புயல் வருவதை முன்கூட்டியே கண்டு பிடிக்க முடியும் என்பது முற்றிலும் உண்மையே என்பது தெளிவாகிறது.

புவியியல் பாடத்தில் சிறந்தவர்கள் என்று பெயர் பெற்ற அந்த பயிற்சி மையத்தை சேர்ந்தவர் தான் புத்தகத்தில் படித்ததை மட்டுமே வைத்து கொண்டு விமர்சனம் செய்தது தவறு உறுதியாகிவிட்டது. எதிர்கால ஆட்சியாளர்களை உருவாக்க பயிற்சியளிக்கும் இது போன்ற ஆசிரியர்கள் புத்தக அறிவுடன் கொஞ்சம் நவீன தொழில்நுட்ப வசதிகளை பற்றியும் அறிந்து கொள்வது சிறந்தது.

தற்போது பிரபல கட்சி தலைவரும்,தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் போன்றவர்கள் சுதந்திர தின நாளை கூட சரியாக சொல்ல முடியாமல் தடுமாறும் நிலையில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் புயல் முன்னறிவிப்பு பற்றி வெளியிட்ட அறிக்கையை விமர்சித்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆதாரத்தை காட்டி பாமகவினர் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை படிக்க நமது News4 Tamil முகநூல் பக்கத்தை பின்தொடருங்கள்.


error: Content is protected !!
WhatsApp chat