மத மாற்றத்தை தட்டி கேட்ட பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு!

0
67

கும்பகோணத்தை அடுத்துள்ள திருவனந்தபுரத்தில் மதமாற்றத்தை தட்டி கேட்டதாக பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் ராமலிங்கம் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கு குறித்து முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதின் உட்பட 18 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை வழக்கு பதிவு செய்தது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக 13 பேரை கைது செய்தனர். அதோடு இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 5 பேர் தலைமறைவாக இருக்கிறார்கள்.

சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருக்கின்ற என். ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முகமது அசாருதீன், நிஜாம் அலி, சபருதின் உட்பட 10 பேர் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்கள்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி என் பிரகாஷ் மற்றும் டிகா ராமன் அடங்கிய அமர்வு, வழக்கில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையை ஆரம்பிக்காமலும், விசாரித்த சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்யாமலும் தாமதித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

சாட்சிகளின் விசாரணை முடிவுற்றால் உடனடியாக குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்ததை கீழமை நீதிமன்றம் புறக்கணித்துள்ளதாக அதிர்ச்சி தெரிவித்த நீதிபதிகள், இதே நிலை நீடித்தால் வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைய மேலும் 10 ஆண்டு காலங்கள் ஆகும் என்று தெரிவித்தார்கள்.

ஆகவே மேலும் தாமதிக்காமல் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளின் விசாரணையையும் மற்ற சாட்சிகளின் குறுக்கு விசாரணையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அத்துடன் முதலில் பாதுகாக்கப்பட்ட சாட்சிகளை விசாரிக்க வற்புறுத்த மாட்டோம் என்று தெரிவித்த குற்றம் சாட்டப்பட்ட தரப்பு, தற்சமயம் அவர்களிடம் விசாரணை நடத்தவில்லை என்று அதே காரணத்தை தெரிவித்து ஜாமீன் கேட்க முடியாது என்று தெரிவித்து 10 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.