பாமக தனித்து போட்டியிட முடிவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக தலைமை

0
199
anbumani ramadoss
anbumani ramadoss

பாமக தனித்து போட்டியிட முடிவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் திமுக தலைமை

2021 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று திமுகவும், அதே போல இருக்கும் ஆட்சியை மீண்டும் தக்கவைத்து கொள்ள தற்போது ஆட்சி செய்து வரும் அதிமுகவும் வியூகங்களை வகுத்து வருகின்றன.

இந்நிலையில் திமுக ,அதிமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளன.அந்த வகையில் தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருப்பதாக கருதும் பாமகவும் தற்போது தனித்து போட்டியிட போவதாக செய்தி கசிந்துள்ளது.

சமீபத்தில் பாமக தரப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கேட்டு டிசம்பர் 1 ம் தேதியிலிருந்து தொடர் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது வரை அதிமுக அரசு மவுனம் காத்து வருகிறது. இதனால் பாமக தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த அதிருப்தியால் பாமகவானது எப்படியும் திமுக கூட்டணிக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பில் திமுக தலைமை இருந்துள்ளது.

இந்நிலையில் தான் இட ஒதுக்கீடு கோரிக்கையை ஏற்று கொள்ளாத அதிமுகவுடன் கூட்டணியில் தொடர வேண்டாம் என்றும், அதே நேரத்தில் திமுகவுடன் கூட்டணி வைத்தால் அது மேலும் பாமகவுக்கு இழுக்கு என்றும் யோசித்து தனித்து போட்டி போவதாக முடிவு எடுத்துள்ளார்களாம்.

அதற்காக பாமக தரப்பு தங்களுக்கு சாதகமாக உள்ள 118 தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

அதில் கும்மிடிபூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர், ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், திருப்பெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், காஞ்சிபுரம், அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிபேட்டை, ஆற்காடு, வேலூர், அணைக்கட்டு, கே.வி. குப்பம், குடியாத்தம் , வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி, பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, கங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்திவேலூர், பவானி, அந்தியூர், மணப்பாறை, பெரம்பலூர், குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார், வேதாரண்யம், நன்னிலம், திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தொகுதி பட்டியிலில் தனித்தொகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு பாமக தனித்து போட்டியிடும் இந்த 118 தொகுதியில் குறைந்தது 40 தொகுதியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்றும் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரபடுத்தியுள்ளார்களாம்.ஏற்கனவே அன்புமணியின் முப்படைகள் மூலம் அக்கட்சி பரவலாக முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்ககது

எப்படியாவது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வியூகம் வகுத்து வரும் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு பாமக தனித்து போட்டியிடுவது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டதால் அக்கட்சி எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியாமல் போனாலும் ஏறக்குறைய 64 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவின் வெற்றி தோல்வியை தீர்மானித்தது என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.குறிப்பாக குறைந்த வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த திமுகவிற்கு தான் பெரும் பாதிப்பாக அமைந்தது.

இந்நிலையில் இந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதால் மேலும் வாக்குகள் பிரிவதால் பாமக தலைமை போட்டுள்ள கணக்குப்படி 30 முதல் 40 தொகுதிகள் வரை வெற்றி வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகிறது.

 

author avatar
Parthipan K