கொரோனாவையே கலாய்த்த மருத்துவர் ராமதாஸ்!

0
57

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் கோரத்தாண்டவம் சென்ற 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆரம்பித்து தற்போது வரையில் மிக வீரியத்துடன் தன்னுடைய கோரத்தாண்டவத்தை ஆடி வருகிறது. தற்போதைய நிலையில், நாடு இரண்டாவது நோய்தொற்று அலையில் திண்டாடி வருகிறது. மூன்றாவது அலை இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற ஒரு பயம் அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கிறது.

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளி அதோடு கிருமிநாசினி உபயோகப்படுத்துவது போன்றவற்றை இன்றுவரையில் கடைபிடித்து வருகின்றோம். இன்னும் ஒரு சில வருடங்கள் இது நடைமுறையில் இருக்கலாம் என்று மருத்துவ மற்றும் ஆராய்ச்சி வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் பல பகுதிகளில் பொதுமக்கள் கண்காணிக்க அரசாங்கத்தால் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் பல காரணத்திற்காக அவர்கள் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை தவிர்த்து மிக அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது, நோய்தொற்று பரவலை கலாய்ப்பது போல பொதுமக்களின் அலட்சியத்தை சுட்டிக்காட்டி வழிகாட்டு நெறி முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார்.

இது குறித்து தன்னுடைய வலைதள பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது இந்திய மக்கள் வறுமையிலும், அறியாமையிலும் வாடி வருகின்றார்கள். என்னிடமிருந்து தப்பிக்க வழிகளை தெரிவித்தாலும் அதனை செய்ய மறுக்கிறார்கள். இந்தியர்கள் மீது பரிதாபப்பட்டு ஈரேழு உலகத்தில் பூலோகத்தை தவிர்த்து மற்ற பதிமூன்று உலகங்களுக்கு நான் செல்கின்றேன் குட்பை இந்தியா இப்படிக்கு கொரோனா என்று தெரிவித்திருக்கிறார்.