முதலமைச்சரின் சர்ச்சைக்குரிய கருத்து! மருத்துவர் ராமதாஸ் ட்விட்!

0
74

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக, அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளால் நிரம்பி வழியும் ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒருபுறம் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கூட மக்கள் அதனை சரியாக கடைபிடிக்காத தான் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது.

தற்போது விதிக்கப்பட்டிருக்கும் முழு வருடங்கள் மேலும் மிகவும் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என்று மக்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். பகுதி அளவு அனுமதி அளித்து ஊரடங்கை அறிவியுங்கள் என்று இன்னொரு தரப்பும் கருத்து தெரிவித்து வருகிறது. தற்சமயம் நோய்த்தொற்று பரவல் சூழ்நிலையை கருத்தில் வைத்து முழு ஊரடங்கை மிகக் கடுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மட்டுமே மிகத்தெளிவாக வலியுறுத்தி வருகிறார்கள் ஒரு சிலர்.

 

 

 

இதுபோன்ற சூழ்நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஊரடங்கு நோய் தொற்று பரவலுக்கு ஒரு முடிவை கொடுத்து விடாது என்று தெரிவித்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த கருத்து ஒருபுறம் வரவேற்பை பெற்றாலும் இன்னொருபுறம் இந்தக் கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் ஒரு ட்விட்டர் பதிவு செய்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தீர்வு இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருப்பது தவறான உதாரணம். ஊரடங்கு வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் பொதுமக்களின் உயிரை ஊரடங்கு தான் காக்கும் என்பதையும் முதலமைச்சர் அறிந்திருப்பார் என நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ராமதாஸ்