முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

0
89

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த குற்றவாளியான பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும்- பாமக நிர்வாகி

முத்துராமலிங்க தேவரை இழிவு செய்யும் வகையில் முகநூலில் பதிவிட்ட வெறுப்பு குற்றவாளியான இணையதள பத்திரிக்கையாளரை தண்டிக்க வேண்டும் என்று பாமக நிர்வாகி பசுமை தாயகம் அருள் ரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து “தமிழ் நாட்டின் வெறுப்பு அரசியல் பொறுக்கிகள்!” என்ற தலைப்பில் முகநூலில் அவர் பதிவிட்டுள்ளதில் கூறியுள்ளதாவது.

கீற்று நந்தன் எனும் இனவெறி பீடித்த பொறுக்கி, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்து கொச்சையான வெறுப்பு கருத்துகளை முகநூலில் பகிர்ந்துள்ளார். இந்த வெறுப்புக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்.

பல சமூகப் பிரிவுகள் கொண்ட நாட்டில் ஒவ்வொரு சமுதாயமும் தனக்கான அடையாளங்களை போற்றுவது இயல்பு. உண்மையில் சமுதாய தொன்மங்களும், வரலாற்று தலைவர்களும் அந்தந்த சமுதாயங்களின் கூட்டு மனத்தின் வெளிப்பாடு ஆகும். சில தலைவர்கள் ஒரு சமுதாயத்துக்காக போராடியிருந்தாலும், அவர் அனைத்து சமுதாயங்களாலும் ஏற்கப்படுவர். சில தலைவர்கள் அனைத்து சமூகங்களுக்காகவும் போராடியவராக இருந்தாலும், அவர் சார்ந்த சமுதாயம் அவரை அடையாளமாகக் கொள்ளும். இத்தகைய அடையாளங்களை அவமதிப்பது என்பது அந்த சமுதாயத்தையே ஒட்டுமொத்தமாக அவமதிக்கும் செயலாகும்.

அந்த வகையில், கீற்று நந்தன் எனும் பொறுக்கியின் செயல் முக்குலத்தோர் சமூகத்தவர்களையும், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் இழிவுசெய்யும் இழிசெயல் ஆகும்.

கிறிஸ்தவர்களை ‘பாவடைகள்’ என்றும், இஸ்லாமியர்களை ‘இம்ரான்கான் பிள்ளைகள்’ என்றும், வன்னியர்களை ‘மரம்வெட்டிகள்’ என்றும், சமூகநீதிக்காக போராடிய தலைவரை ‘சொறியார்’ என்றும் பேசுவது எப்படி மிக மோசமான வெறுப்பு பேச்சு (Hate Speech) வடிவமோ, அதே போன்ற வெறுப்பு பேச்சு தான் – கீற்று நந்தனின் இழி செயலும் ஆகும். இத்தகைய அனைத்து வெறுப்பு பேச்சுகளும் கண்டிக்கப்பட வேண்டும். தடுக்கப்பட வேண்டும்.

சமூக ஊடகங்கள் ஒரு மிகப்பெரிய தகவல் தொடர்பு சாதனமாக மாறியுள்ள இக்காலத்தில், இனவெறுப்பு, மதவெறுப்பு, சாதிவெறுப்பு, மொழிவெறுப்பு கருத்துகள் எளிதில் பரவி சமூக அமைதிக்கு பெரும் கேட்டினை விளைவுக்கும் சூழல் உள்ளது. இத்தகைய ஆபத்தான சூழலில், கீற்று நந்தன் போன்று இனவெறுப்பு பொறுக்கிகள், வெறுப்பை வளர்த்து வன்முறைக்கு வழி வகுக்கிறார்கள்.

கீற்று எனும் இணைய தளத்தை நடத்தும் இந்த ‘கீற்று நந்தன்’ ( Keetru Nandhan ) வெறுப்புக் குற்றவாளியின் உண்மை பெயர் ரமேஷ். இவரது தாய்மொழி தெலுங்கு. இவர் ‘முற்போக்கு, திராவிட, கம்யூனிச’ வெறுப்பு அரசியல் கும்பலைச் சேர்ந்தவராகும். பசும்பொன் முத்துராமலிங்க தேவரை இழிவு செய்த இந்த வெறுப்புக் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

author avatar
Ammasi Manickam