திமுகவின் அரசியல் வியூகத்தையே பந்தாடிய பாமக மற்றும் பாஜகவினர் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின்

0
108
MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today
MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

திமுகவின் அரசியல் வியூகத்தையே பந்தாடிய பாமக மற்றும் பாஜகவினர் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின்

தற்போதைய அரசியலில் அரசியல்வாதிகள் பேசுவதை பெரும்பாலான மக்கள் நம்புவதில்லை அதே நேரத்தில் நடுநிலை என்ற பெயரில் ஊடகங்கள் தெரிவிக்கும் கருத்துக்களை ஓரளவு மக்கள் நம்பி வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான பிரபல ஊடகங்களின் உதவியுடன் அரசியல்வாதிகள் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

இது போல முயற்சி செய்யும் அரசியல்வாதிகளையும், பிரபல ஊடகங்களையும் இணைக்கும் பணியை தான் சமீப காலங்களில் அரசியல் ஆலோசனை என்ற பெயரில் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் என்ற நிறுவனம் செய்து வருகிறது. இதற்கு முன்பாக பிரதமர் மோடி, நிதிஷ் குமார் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு இவர் வெற்றி வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார்.

இதனால் தமிழக அரசியல் கட்சிகளும் அவரின் உதவியை நாடி சென்றன. அந்த வகையில் குறிப்பாக நடிகர் கமலஹாசன் மற்றும் அதிமுக தரப்பு இவரை பயன்படுத்தி கொள்ள முயற்சித்து வந்தன. இந்த போட்டியில் சமீபத்தில் திமுகவும் இணைந்தது. இந்நிலையில் மற்ற கட்சிகள் அனைத்தும் பின் வாங்கியது.

இதையடுத்து திமுகவிற்காக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் செயல்படுமா? என்பது குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தன. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்துடன் திமுக இணைந்து பணியாற்றும் என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஸ்டாலினின் இந்த அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இதில் அதிமுக கூட்டணி கட்சிகளான பாமக மற்றும் பாஜகவினர் இணைந்து திமுகவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர்களுடன் ரஜினி ரசிகர்களும் இணைந்து கொண்டு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின் என்ற கேஷ் டேக்கில் டிவிட்டரில் பதிவிட்ட விமர்சனங்கள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற திமுக தலைவரின் முதல்வர் கனவை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிகளும் அவருக்கே எதிராக அமைந்து விடுகிறது. அந்த வகையில் தற்போதைய இந்த முயற்சியையும் அவருக்கு எதிராக அதிமுக, பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் திருப்பி விட்டிருக்கின்றனர்.

author avatar
Ammasi Manickam