திமுகவுடன் பாமக கூட்டணியா? அன்புமணி சொன்ன பதில்!

0
237
#image_title

திமுகவுடன் பாமக கூட்டணியா? அன்புமணி சொன்ன பதில்!

சேலத்தில் இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இரும்பாலையை தனியார் மயமாக்க விடமாட்டேன் என்று தெரிவித்தார். சேலம் மாநகரில் 3 தலைமுறையாக பாதாள சாக்கடை திட்டம் நிறைவடையாமல் உள்ளது என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் மேட்டூர் உபரி நீர் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். என்.எல்.சி நிறுவனத்தின் விரிவாக்கப் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் விவகாரத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார்.

வருகிற 2026ம் ஆண்டில் தமிழகத்தில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதற்கான பணி நாடாளுமன்ற தேர்தலில் துவங்கப்படும் என்றும் அன்புமணி தெரிவித்தார்.
சமீப காலமாக பாமக திமுகவுடன் கூட்டணியில் சேர போவதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தது. இந்நிலையில் திமுக உடன் கூட்டணி குறித்து எந்த பேச்சுவார்த்தையும் இல்லை எனவும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த வதந்திக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

இன்று கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்தும் அன்புமணி பேசியுள்ளாநர். லாபத்தில் இயங்கும் கேஸ் நிறுவனங்கள், கேஸ் விலையை உயர்த்தக் கூடாது. உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தினார். மேலும் நிழல் நிதிநிலை அறிக்கை இந்த வாரம் பாமக சார்பில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

author avatar
Parthipan K