வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு? பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் பொதுக்கூட்டம்

0
82
Anbumani Ramadoss
Anbumani Ramadoss

வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு?
களமிறங்கிய பாமக

வட இந்தியர்களுக்கு மட்டும் வேலை என்றால் தமிழகத்தில் என் எல் சி நிறுவனம் எதற்கு? பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான தமிழக அரசு தேர்வுகளில் சரி தமிழகத்தில் உள்ள தனியார் நிறுவனங்களின் சரி தற்போது வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது .இதற்கு அவ்வப்போது பல்வேறு அமைப்புகளும் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.

அதே போல் நெய்வேலியில் உள்ள என்.எல்.சியில் அதிகமாக வட இந்தியர்கள் நிரந்தர பணிக்காக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். விடைத்தாள் சரிபார்ப்பது நிறைய குளறுபடி நடப்பதால் தான் வட இந்தியாவை சார்ந்த மாணவர்கள் பெரும்பாலானோர் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று தமிழக இளைஞர்கள் சார்பில் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை அந்த நிறுவனம் முற்றிலுமாக மறுத்து வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு நெய்வேலி என்எல்சியில் பொறியல் பட்டதாரிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது இதில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இளைஞர்களும் கலந்து கொண்டார்கள்,1500க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான இந்தத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எட்டு பேர் மட்டும்தான் தேர்வு செய்யப்பட்டார்கள் மற்ற அனைவரும் வட இந்தியர்களாக இருந்தனர்.

அனைத்து தகுதியும் திறமையும் இருந்தும் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த என்எல்சி நிறுவனம் அமைய தமிழகத்தை சேர்ந்த பல்வேறு குடும்பங்கள் தன் சொந்த விவசாய நிலங்களையும் சொந்த வீடுகளையும் இழந்தார்கள். அப்படி இந்த நிறுவனம் கட்டமைக்கவும் நன்கு வளரவும் உதவி செய்த உள்ளூர் மக்களுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை தராமலும், ஏற்கனவே அங்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளிகளை நிரந்தரம் செய்யாமலும் அந்த நிறுவனம் இருட்டடிப்பு செய்து வருகிறது.

எங்கேயோ உள்ள வட இந்தியர்களுக்கு முன்னுரிமை அளித்துவரும் இந்த நிறுவனத்திற்கும், மத்திய அரசுக்கும் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் இந்த பொதுக்கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

என் எல் சி நிறுவனத்தில் நடைபெறும் வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ள ரகசிய வாக்கெடுப்பில் பாட்டாளி தொழிற்சங்கத்தை வெற்றி பெறச் செய்தால் தமிழர்களுக்கான முன்னுரிமை பெற்றுத் தருவோம் என்றும், உள்ளூர் மக்களுக்கு அதிக முன்னுரிமையும்,இங்கு ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு நிரந்தர பணி நியமனம் வாங்கித் தருவோம் என்றும், வாரிசுகளின் அடிப்படையிலும் வேலை வாங்கித் தரும் என்றும் பாட்டாளி தொழிற் சங்கத்தின் தலைவர் செல்வராஜ் பேசினார்.

ஆந்திராவில் தனியார் நிறுவனங்களில் 75% வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கே அளிக்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்ட மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இதேபோல் தமிழகத்திலும் தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தமிழக இளைஞர்கள் முதல்வருக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.இந்நிலையில் பாமகவின் இந்த கோரிக்கையும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்காது என ஆய்வுகள் கூறுகிறது.

 

author avatar
Parthipan K