உங்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கின்றோம்! பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சி!

0
44

மன்பிரீட் சிங் தலைமையிலான இந்திய ஆண்கள் ஹாக்கி அணி நேற்றைய தினம் நடந்த அரையிறுதி போட்டியில் 5-2 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இந்திய அணிக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றார்.ஒலிம்பிக்கில் 8 முறை சாம்பியனான இந்திய ஹாக்கி அணி கடைசியாக 1980 ஆம் வருடம் தங்கப்பதக்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி விளையாடி இருக்கிறது.

நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் உலகத் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கின்ற இந்திய அணி 2-வது இடத்தில் இருக்கின்ற பெல்ஜியம் எதிர்கொண்டது. இந்திய வீரர்கள் ஹார்மன் ப்ரீத் சிங், மந்தீப் சிங், உள்ளிட்டோர் ஆட்டத்தின் முதல் 8 நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார்கள் .பெல்ஜியம் அணி கடைசியில் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது அதேநேரம் இந்திய அணிக்கு வெண்கல பதக்கம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதனை தொடர்ந்து நடைபெற இருக்கின்ற வெண்கலப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்திற்கான ஆட்டத்தில் நிச்சயமாக இந்திய அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய வலைதள பக்கத்தில் இருக்கின்ற செய்திக்குறிப்பில் வெற்றி, தோல்விகள் வாழ்க்கையின் ஒரு பகுதிதான் ஒலிம்பிக் 2020 போட்டியில் நம்முடைய அணி சிறப்பாக விளையாடியது. களத்தில் அதுதான் முக்கியம் அடுத்து நடக்க இருக்கின்ற வெங்கலப் பக்கத்திற்கான போட்டிக்கும் அவர்களின் எதிர்காலம் முயற்சிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எங்கள் வீரர்களை நினைத்து நாங்கள் பெருமை கொள்கின்றோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கின்றார்.

அதேபோல மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சூர் வெளியிட்டிருக்கின்ற ஒரு செய்தி குறிப்பில் வீரர்களே நீங்கள் நன்றாக செயல்படுவீர்கள். நீங்கள் உங்களால் முடிந்ததை சிறப்பாக செயலாற்றி இருக்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் நமக்கு இன்னும் ஒரு போட்டி இருக்கின்றது. நாங்கள்தான் இந்தியா ஒரு போதும் எங்கள் நம்பிக்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அடுத்த போட்டிக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் விதத்தில் தெரிவித்திருக்கின்றார்.