இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல: பிரதமர் மோடி டுவீட்

0
125

இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ அல்ல: பிரதமர் மோடி டுவீட்

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அயோத்தி மட்டுமின்றி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

இந்த நிலையில் தீர்ப்பு வெளியாக இன்னும் சில நிமிடங்களே இருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில் இந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியையோ அல்லது தோல்வியையோ தரப்போவது இல்லை. நாட்டு மக்களுக்கு என்னுடைய வேண்டுகோள் என்னவெனில் எந்த தீர்ப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொண்டு மக்கள் இந்தியாவின் அடையாளமான அமைதியையும், சமத்துவத்தையும் பேணி பாதுகாக்க வேண்டும் என்பதுதான்!” என கூறியுள்ளார்

மேலும் நீதித்துறையின் மாண்பு மற்றும் நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து சமூகத்தினரும், சமூக கலாச்சார அமைப்பினரும், அனைத்துக் கட்சயினரும் மக்களிடையே நல்லுணர்வும், ஒற்றுமை உணர்வும் ஓங்கி திகழ முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், தீர்ப்புக்குப் பின்னரும் நம்மிடைய நல்லிணக்கம் நிலவ வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

மேலும் கடந்த சில மாதங்களாகவே இந்த தீர்ப்புக்காக நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள் என்றும், தொடர்ந்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு இந்த விசாரணையை ஆவலுடன் பார்த்து வந்த நிலையில் இந்த பிரச்சனை சுமூகமாக முடிய அனைத்துத் தரப்பினரும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

author avatar
CineDesk