உத்தரபிரதேசத்தில் முக்கிய திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

0
62

நோய் தொற்று காரணமாக, இந்தியா முழுவதும் பதற்றமான நிலையில் இருந்து வந்தாலும், அதனை மத்திய, மாநில அரசுகள் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறார்கள்.

அதேநேரம் ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்வரும் காலங்களில் மக்களை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்ற ஒரு செய்தியையும் மனதில் வைத்து செயல்பட்டு வருகிறார்கள். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் உத்தர பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது, அந்த மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய ,மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணாசியில் காசிவிஸ்வநாதர் ஆலயத்தையும், கங்கை நதிக்கரையையும், ஒன்றாக இணைக்கும் 339 கோடி ரூபாயில் கட்டப்பட்ட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் திறந்துவைத்தார்.

இதன் அடுத்த கட்டமாக அந்த மாநிலத்தின் ஷாஜகான்பூரில் கங்கை விரைவுப் பாதை அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்ட இருக்கிறார். இதன் மூலமாக நாட்டின் மிக நீளமான விரைவுச்சாலை ஆக இது அமையவிருக்கிறது. பிரயாக்ராஜ் வரையில் 36 ஆயிரத்து 200 கோடி செலவில் 694 கிலோ மீட்டர் தொலைவிற்கு விரைவுச் சாலை அமைக்கப்பட இருக்கிறது. இந்த பகுதியில் இந்திய விமானப்படை விமானங்கள் அவசரமாக தரை இறங்குவதற்கு ஏதுவான விதத்தில் சுமார் 3.5 கிலோ மீட்டர் தொலைவில் விமான ஓடுதளம் ஒன்றும் அமைக்கப்பட இருக்கிறது.