75 ரூபாய் நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

0
64

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் FAO எனும் உணவு மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட அமைப்பின் 75 ஆவது ஆண்டுவிழாவில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார். 75 ரூபாய் புதிய நாணயத்தை இந்த நிகழ்ச்சியில் நாளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நாட்டில் உள்ள மக்களின் பொருளாதார சிக்கல்களை சரி செய்வதிலும் மேலும் மக்களின் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை அகற்றவும் மற்றும் வேளாண் துறையை ஊக்குவிப்பதிலும் முன்னுரிமை செலுத்தி வருவதை காட்டும் விதத்தில் இந்நிகழ்ச்சி அமைய போவதாக அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து அங்கன்வாடி ஊழியர்களும், தோட்டக்கலை இயக்கத்தை சேர்ந்தவர்களும், வேளாண் துறையை சேர்ந்தவர்களும், இயற்கை விவசாய துறையினரும் மற்றும் வேளான்  அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களும், பெண்கள், குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி  அவர்கள் உள்பட இந்நிகழ்ச்சியில் பலர் பங்கேற்க உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஜனசங்க நிறுவனர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவின் நினைவாக 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 100 ரூபாய் நாணயம் கடந்த 12ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K