வெளியானது தமிழக பாஜகவின் தேர்தல் அறிக்கை! திமுகப் பெரும் அதிர்ச்சி!

0
73

தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்திலும் அதோடு தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்று எல்லாவற்றையும் முடித்துவிட்டு தற்சமயம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் அதிமுக திமுக போன்ற தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக தங்களுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதோடு அரசியல் கட்சிகள் சார்பாக வெளியிடப்படும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி வாரி இறைக்கபடுகின்றன. அந்த விதத்தில் அதிமுக சார்பாக சமீபத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கையில் பல சிறப்பம்சங்கள் இருந்தது. அதில் ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும் என்ற அறிவிப்பு, அதோடு அனைத்து இல்லங்களுக்கும் வாஷிங்மெஷின் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு, அதேபோல இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் அதேபோல வருடத்திற்கு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பது போன்ற அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது

அதேபோல எதிர்க்கட்சியான அதிமுகவும் தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிலும் பல சிறப்பம்சங்கள் இருந்தது. ஆனால் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகுதான் அதிமுக வெளியிட்டது. ஆகவே திமுக தேர்தல் அறிக்கையை காட்டிலும் மிகுந்த சிறப்பு மிக்க தேர்தல் அறிக்கையை அதிமுக கொடுத்திருந்தது.அதேபோல பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளும் தங்களுடைய தேர்தல் அறிக்கையை தாக்கல் செய்திருந்தன. அந்த வரிசையில் தற்சமயம் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தன்னுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.

அதில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, அதோடு சென்னை மாநகராட்சியை மூன்று பாகங்களாக பிரிப்பது , மணல் குவாரிகளுக்கு தடை விதிப்பது, போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றிருக்கிறது.இந்த சூழ்நிலையில், எதிர்வரும் 30ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர் தாராபுரத்தில் பாஜக சார்பாக நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் தெரிவித்து இருக்கிறார்.