இந்திய அளவில் நோய் தடுப்பு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது!

0
92

நாட்டில் ஏற்பட்டுள்ள தினசரி நோய்த்தொற்று பாதிப்பு கடந்த 3 தினங்களாக 8 ஆயிரத்திற்கும் மேல் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,594 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நோய் பாதிப்பு 8084 என இருந்தது. அதாவது இன்றைய தின நோய் தொற்று பாதிப்பு 18 சதவீதம் குறைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,32,36,695 என அதிகரித்திருக்கிறது.

நோய்தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,035 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டிருகிறார்கள். இதுவரையில் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,26,61,370 என அதிகரித்திருக்கிறது.

தற்போது இந்த நோய் பெட்ரோல் பரவலுக்கு சிகிச்சைபெற்று வருவோரின் எண்ணிக்கை 50,548 ஆக இருக்கிறது. இது நேற்றைய பாதிப்பை விட 2533 அதிகம் என சொல்லப்படுகிறது, இதுவரையில் 195,35,00000 தவணை தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு நடுவே நேற்றைய தினம் 3,21,873 மாதிரிகளும் ஒட்டுமொத்தமாக இதுவரையில் 85.54 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.