கொரோனா தொற்று பரவல்! நாடுதழுவிய ஊரடங்கு அவசியமா?

0
78

கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதை அடுத்து நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதலமைச்சர்கள் உடனும் ஆலோசனை நடத்தினார்..இதில் தமிழக அரசு சார்பாக தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன் பங்கேற்றார்.இந்த ஆலோசனையில் உரையாற்றிய பிரதமர் மோடி நாடுமுழுவதும் ஊரடங்கு தேவையற்றது என தெரிவித்திருக்கிறார்.

அதேபோல நாட்டில் மறுபடியும் ஒரு சவாலான நிலையை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். இந்த நோய்த்தொற்றின் முதல் அலை விடவும் இரண்டாவது அலை மிக வேகமாக இருக்கிறது. மகாராஷ்டிரா பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இந்தத் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது என்பது கவலையாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

இதனை கட்டுக்குள் கொண்டுவர ஆலோசனை வழங்கவேண்டும் என்று தங்கள் எல்லோரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு நோய் தடுப்பு வேலைகளில் எந்தவித தடுங்கலும் இல்லாமல் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி இருப்பதை வரவேற்கின்றேன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கின்ற பகுதிகளில் ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் நாட்டுடைய பொருளாதாரத்தில் எந்த விதமான சமரசமும் செய்து விட இயலாது என்ற காரணத்தால், நாடு முழுவதுமான ஊரடங்கு தேவை கிடையாது. இருந்தாலும் இந்த தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாம் சோர்ந்து போகக்கூடாது. சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

இறப்பு விகிதத்தை குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும், நோயாளிகளின் நோய் தொடர்பான விரிவான தகவல் நம்மிடம் இருக்க வேண்டும், இது அவர்களுடைய உயிரை காப்பாற்றுவதற்கு உதவிகரமாக இருக்கும். இந்த தொற்றினால் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த முப்பது பேரையாவது கண்டுபிடித்து அவர்களுக்கு சோதனை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

அதோடு தடுப்பூசி வீணாவதை நிச்சயமாக தடுத்து நிறுத்தவேண்டும் 100% தடுப்பு ஊசி செலுத்தி கொள்வது என்ற இலக்கை நாம் எட்டவேண்டும். ஏப்ரல் மாதம் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் தடுப்பூசி திருவிழாவை நடத்திக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி.

அதேபோல தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனர். இந்த நோய் தொற்றின் தாகத்தை குறைப்பதற்கு 15 மண்டலங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள், முப்பத்தைந்து மாவட்டங்களுக்கும் ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிவித்திருக்கிறார். தலைமைச்செயலாளர் ராஜிவ் ரஞ்சன்.