கடும் எதிர்ப்பின் எதிரொலி! ரத்தானது பிளஸ் 1ல் நுழைவு தேர்வு !

0
87

பள்ளிகள் அளவில் நடைபெற இருந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவு தேர்வு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. நோய்த்தொற்று காரணமாக, தமிழ்நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை எல்லோரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது 9 10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு அவர்களும் தேர்ச்சி ஆனதாக அறிவிப்பு வெளியானது.

ஆகவே இவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் பணி தற்சமயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 10 முதல் 15 சதவீதம் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம். அவ்வாறு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாணவர்கள் விண்ணப்பம் செய்தால் பாடப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாணவர்கள் விண்ணப்பம் செய்தால் சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 வினாக்கள் கொண்ட சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் முறையிலான நுழைவுத் தேர்வை சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி மாணவர்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே அதிர்ச்சியை உண்டாக்கியது. இந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்வி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், பதினோராம் வகுப்புக்கு எப்படி நுழைவு தேர்வை நடத்தலாம் என்று தமிழகம் முழுவதும் கேள்வி எழ தொடங்கியது.

இந்த சூழ்நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி இருக்கும் ஒரு சுற்று அறிக்கையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையின் போது மிகவும் அதிகப்படியான விண்ணப்பங்கள் வரும் பாடப்பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு வகுப்பின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்த வேண்டாம். அதற்க்கு பதிலாக மாணவர்களின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவுரையின்படி பதினோராம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்த அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார்.