+2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு! சாதித்துக் காட்டிய மாணவிகள்!

0
74

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள், தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சென்ற வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 8,06,277 மாணவ மாணவிகளில் 7,55,998 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

சென்ற வருடத்தை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் அதிகம் என்று சொல்லப்படுகிறது அதோடு மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்தலில் தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டம் 92.95% தேர்ச்சி பெற்று 2வது இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் 97.27 சதவீதம் தேர்ச்சி பெற்று 3-வது இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் 97.02 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கிறது. அதேபோல வேலூர் மாவட்டம் 86.69 சதவீத தேர்ச்சியுடன் மிக குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டமாக இருக்கிறது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு வருகின்ற ஜூலை மாதம் 22ஆம் தேதி நடைபெறும். எதிர்வரும் 24 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஒட்டுமொத்தமாக 9,12,620 மாணவ மாணவிகள் எழுதி இருக்கின்றனர் இதில் 90. 07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

அதேபோல 10-ஆம் வகுப்பில் 8,21,994 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் 10ம் வகுப்பில் 4,52,499 மாணவிகளும்,4,60,120 மாணவர்களும், 3ம் பாலினத்தைச் சேர்ந்த ஒரு நபரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். அதேபோல தேர்ச்சி சதவீதத்தில் மாணவிகள் 94.38 சதவீதம்பேரும், மாணவர்கள் 85.08 சதவீதம் பேரும், தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.

10ம் வகுப்புக்கான துணைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி ஆரம்பமாகும் என்று சொல்லப்படுகிறது.

10ம் வகுப்பில் 97.22 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம் பிடித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல 79.87 சதவீதம் மட்டுமே தேர்ச்சி பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடத்தை கைப்பற்றியிருக்கிறது.

10ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே 100 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 85.25% அரசுப் பள்ளிகள் தேர்ச்சி பெற்று இருக்கின்றன