சாகச நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதிகொண்ட விமானங்கள்! 6 போ் பலி!

0
102
Planes collided face to face in the adventure show! 6 go sacrifice!
Planes collided face to face in the adventure show! 6 go sacrifice!

சாகச நிகழ்ச்சியில் நேருக்கு நேர் மோதிகொண்ட விமானங்கள்! 6 போ் பலி!

அமெரிக்காவில் ஆண்டுதோறும்  நவம்பர் மாதம்  முன்னாள் போர்ப்படை  வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு கடந்த 11ஆம் தேதி அமெரிகாவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டலஸ் பகுதியில் சாகச நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது .

 இதனை தொடர்ந்து தனியார் நிறுவனம் ஒன்று  தன் சார்பில் சாகச நிகழ்ச்சியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை  நடத்தப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் இரெண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட  40-கு மேற்பட்ட விமானங்கள் பங்கேற்றன.

 இதில் சனிக்கிழமை அன்று பி-17 மற்றும் பி- 63 போர்விமானங்கள் மோதிகொண்டன.இவற்றில் பி-17 என்ற விமானம் 1930-து காலத்தில் நான்கு என்ஜின்களை கொண்டு 200 மேற்ப்பட்ட குண்டுகளை சுமந்து செல்லும் வகையில் தயாரிக்க பட்டது.

1935-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28-ஆம் தேதி தனது முதல் சண்டையில்  கலந்துகொண்டது.இந்த ரக விமானம் தரையில் உள்ள இலக்குகளைக் குறிவைத்து வானிலிருந்து குண்டு வீசும் திறன்களை கொண்டது.

அதே போல் பி -63 விமானமும் பெல் எர்கரப்ட் என்ற  நிறுவத்தின் மூலம் தயாரிக்க பட்டு இரண்டாம் உலகபோரில் கலந்துகொண்டது.இந்த இரண்டு விமானமும் சனிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டலஸ் பகுதியில் சாகச நிகழ்ச்சி நடத்த போது மோதிகொண்டன.

இந்த விபத்தில் மொத்தம் 6 போ் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தனியாா் நிறுவனத்தின் தலைவா் கூறுகையில், பி-17 விமானத்தில் 4 முதல் 5 போ் இருந்ததாகவும், கிங் கோப்ரா விமானத்தில் விமானி மட்டும் இருந்ததாகவும் தெரிவித்தாா்.