இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்!

0
73
Plan effective from today! Violation will result in imprisonment and a fine of 1 lakh!
Plan effective from today! Violation will result in imprisonment and a fine of 1 lakh!

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்!

ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு  தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது. நகரப் புறங்களில் வெளிப் பகுதிகளில் பிளாஸ்டிக்கினால் ஆன  பொருட்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் குவியலாக கிடக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.மேலும் மத்திய மாநில அரசானது பலமுறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த ஒரு செயலை மட்டும் தடுக்க முடியவில்லை.

இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது  என  மத்திய மாநில அரசு  அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை பொதுமக்கள், வணிக வளாகங்கள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பிளாஸ்டிக்கினால்  ஆன பொருட்களின் வரிசையில் பலூன் ,ஸ்டிக்ஸ் கப்கள், டிரேபர், மற்றும் ஐஸ் கிரீம் ஸ்டிக், இன்விடேஷன், கார்டு அலங்காரத்திற்காக பயன்படுத்தும் பாலிஸ்டிரீன் மற்றும் நூறு மைக்ரானுக்கு கீழான பிவிசி பேனர் ஸ்டிக்கர்கள் உள்ளிட்ட பொருட்கள்  அடங்கும்.

இந்த பொருட்களை அனைத்தும் பயன்படுத்தினால் கட்டாயமாக அபராதம் விதிக்கப்படும்  என மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கட்டுபாடுகள் அனைத்தும் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது என மத்திய மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த பிளாஸ்டிக் பொருட்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையே நுழைவதை தடுக்க எல்லைகளில் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என மத்திய மாநில அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K