வாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயன்றதாக பியூஷ் மானுஷ் கைது!

வாடகைக்கு இருந்த வீட்டை அபகரிக்க முயற்சி செய்ததோடு, வீட்டின் உரிமையாளரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கியதாக சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் சேலத்தில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சேலத்தைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் சமூக ஆர்வலராக இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் வீட்டின் உரிமையாளரான பெண் ஒருவர் வீட்டை காலி செய்யும்படி பியூஸ் மானுஷ் இடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு பியூஸ் மானுஷ் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் இதனை அடுத்து பியூஸ் மானுஷ் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிகிறது

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார் பியூஸ் மானுஷிடம் இருந்து வாடகையை மட்டும் வசூல் செய்து கொடுத்தனர். மேலும் காலி செய்யும் விஷயத்தில் போலீஸ் தலையிட முடியாது என்றும் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும்படி வீட்டின் உரிமையாளருக்கு போலீஸ் அறிவுறுத்தியதாக தெரிகிறது

இந்த நிலையில் சமீபத்தில் சேலத்திற்கு முதல்வர் பழனிசாமி வந்தபோது வீட்டின் உரிமையாளரான பெண் நேரடியாக முதல்வரிடம் புகார் மனு கொடுத்ததாக தெரிகிறது. இந்த மனுவை விசாரணை செய்யும்படி முதல்வர் பரிந்துரை செய்ததாகவும் இதனையடுத்தே இந்த புகார் மீது காவல்துறை அதிரடியாக நடவடிக்கை எடுத்து பியூஸ் மானுஷை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது

error: Content is protected !!
WhatsApp chat