உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்!

0
118
Pity pretending to help and throwing the baby away! Camera footage!
Pity pretending to help and throwing the baby away! Camera footage!

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்!

தஞ்சையில் பர்மா என்ற காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். 24 வயதான இவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. 22 வயதான பெண். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது.

அதன் காரணமாக குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அன்றே அவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த மாடியிலுள்ள வார்டிலேயே ஒரு பெண் அவரிடம் என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என கூறி உதவி செய்வது போல் நாடகமாடி உள்ளார்.

குழந்தை பிறந்த பின்பு 4 நாட்களாக தாய்க்கு உதவுவது போல அங்கேயே தங்கி இருந்தார். அதனால் தாய்க்கு அந்த பெண் மீது எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. நேற்று காலை தாயை குளிக்கச் செல்ல சொல்லி அந்தப் பெண் சொன்னார். மேலும் குழந்தையை தான் பார்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பிய தாயும் குளிக்க சென்றுள்ளார். கிடைத்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் அந்த பெண் குழந்தையை ஒரு கட்டைபையில் வைத்து கடத்திச் சென்று விட்டார்.

குளித்துவிட்டு வந்த தாயோ குழந்தையைக் காணவில்லையே என்று அதிர்ச்சியில் பதறிவிட்டார். எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால் குழந்தையை பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. எனவே கணவனுக்கும் தகவல் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டனர். பக்கத்து வார்டில் உள்ளவர்கள், அக்கம்பக்கத்தினர் விசாரித்த போதும் குழந்தையை பற்றி எதுவும் தெரியவில்லை.

அப்போதுதான் ராஜலட்சுமிக்கு அந்தப் பெண் மீது சந்தேகம் வந்தது. இது குறித்து கணவனிடம் கூறிய போது, அவர்கள் இதைத் தொடர்ந்து போலீசில் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் மற்றும் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தபோது அந்த குழந்தை பெற்றெடுத்த தாய்க்கு உதவியாக இருந்த பெண் கையில் குழந்தையை எடுத்துக் கொண்டு செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

அதன் அடிப்படையில் போலீசார் அந்த நகர் முழுவதும் தாய் சொன்ன அடையாளங்கள் மற்றும் கேமெராவில் பதிவான பெண்ணின் உருவத்தை வைத்தும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அதுவும் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தை காணாமல் போன இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.