அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்!

0
115
Pinch children lying on the floor in the government hospital! What a new treatment!
Pinch children lying on the floor in the government hospital! What a new treatment!

அரசு மருத்துவமனையில் பிஞ்சு குழந்தைகள் தரையில் கிடக்கும் அவலம்! இது என்ன புது ட்ரீட்மன்ட்!

தென் மாவட்டங்களில் தூத்துக்குடி ,நெல்லை ,தென்காசி ,விருது நகர்,கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் செல்லும் மருத்துவமனை என்றால் அது நெல்லை அரசு மருத்துவமனை தான். அந்த மருத்துவமனைக்கு பல்வேறு ஊர்களில் இருந்து  கர்ப்பிணி தாய்மார்கள் வந்து செல்கின்றனர்.அந்த வகையில் கடந்த 13 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பிறந்து சில தினங்கள் மட்டுமே ஆன பிஞ்சுகுழந்தையுடன் மேல் சிகிச்சைக்காக குழந்தையின் தாயை அழைத்து கொண்டு பெண் ஒருவர் வந்துள்ளார்.

அங்கு படுக்கைகள் எல்லாம் காலியாக கிடந்தது.இந்நிலையில் கைகுழந்தைகளையும் குழந்தை பெற்ற தாய்மார்களும்  தரையில் படுத்திருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.மேலும் அதனை பற்றி அவர்களிடம் கேட்ட போது மருத்துவமனை ஊழியர்கள் தான் இவ்வாறு படுக்கும் படி அறிவுறுத்தினார்கள் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் அந்த மருத்துவமனையில் ஒரு அறையில் கட்டிலுடன் கூடிய படுக்கைகள் காலியாக இருந்தது.மேலும் பிறந்த குழந்தைகள் தரையில் படுக்க முடியாமலும் கொசுக்கடியிலும் அழுதுகொண்டே இருந்தனர்.அப்போது அங்கிருந்த செவிலியர்கள் குழந்தைகளை சத்தம் போடாமல் இருக்க சொல்லுங்க இல்லையென்றால் குழந்தைகளுக்கு பால் கொடுங்கள் என அலட்சியமாக கூறி உள்ளனர்.

கடந்த 17 ஆம் தேதி வரை தாய்மார்களும் ,குழந்தைகளும் தரையில் படுத்திருப்பதை உடன் சென்ற பெண் வீடியோ ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார்.அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்த தாய்மார்கள் இரு தினங்களுக்கு மட்டுமே படுக்கை தரப்படும் எனவும் அடுத்த நாட்களில் அந்த பெண்களும் குழந்தையுடன் தரையில் படுக்க வைக்கப்படுவதாக அங்கிருந்த  பெண்கள் தெரிவித்தனர்.

மேலும் பிரசவத்திற்கு அந்த பெண்களை அழைத்து செல்வதற்கு அங்கு பணிபுரியும் ஊழியார்கள் பணம் கேட்பதாகவும் புகார் தெரிவித்தனர்.இந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளித்த மருத்துவமனை டீன் மருத்துவர் ரவிச்சந்திரன் அந்த மாதிரியான சம்பவம் நடக்க வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார்.

சுகப்பிரசவம் ஆனால் குழந்தைகளை வெளியே எடுத்து செல்ல அனுமதிப்பில்லை.ஐந்து நாட்களுக்கு பிறகு தான் வார்டுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.குழந்தைகளையும் ,தாய்மார்களையும் தரையில் படுக்க வைத்திருக்கும் வீடியோ ஆதாரத்தை கையில் கொடுத்த பின்னரும் அதில் இருப்பவர்கள் அண்டண்டர்கள் என கூறி விளக்கம் அளித்தார். மேலும் சுகாதாரத்துறை தனி குழு அமைத்து விசாரிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

author avatar
Parthipan K