பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைத்த நிதியமைச்சர்! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
92

சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது அதனடிப்படையில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற இருக்கின்ற நிலையில் இன்றைய தினம் அவருடைய ஆட்சியின் கீழ் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் பல தரப்பினரும் இந்த பட்ஜெட்டில் என்ன சிறப்பம்சம் இருக்கப்போகிறது என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்தநிலையில் நோய்த்தொற்று காரணமாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது மாடியில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கலைவாணர் அரங்கத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பித்து செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் நிதி நிலைமை மிக மோசமாக இருந்தது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சமீபத்தில் தமிழகத்தின் நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டார். இந்த இந்நிலையில், இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்ற பட்ஜெட் உள்ளிட்டவற்றில் பல வரிவிதிப்புகள் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அதேபோல நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இந்த வருடத்தின் எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு மட்டுமே என்று தெரிவித்திருக்கின்றார். ஏனென்றால் இதற்கு முன்னர் அதிமுக ஆட்சி காலத்திலேயே ஆறு மாதங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய அதிமுகவின் ஆட்சியாளர்களே தாக்கல் செய்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழக சட்டசபையில் இன்று காகிதம் இல்லாத டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமார் ஒன்றரை மணி நேரமாக பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த பட்ஜெட் தாக்கல் தற்போது வரையில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியில் 3 ரூபாயை குறைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டு இருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். இதன் மூலமாக ஒரு வருடத்திற்கு சுமார் ஆயிரத்து 170 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.