30-3-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

0
105

இந்தியாவைப் பொருத்த வரையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகின்றன.

இதற்கான அனுமதியை மத்திய அரசு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வழங்கியிருக்கிறது.

அதனடிப்படையில், அந்த நிறுவனங்களும் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.

இந்தநிலையில் 137 நாட்களுக்கு பிறகு கடந்த வாரம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உள்ளிட்டவை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் இல்லத்தரசிகள் உள்ளிட்டோர் அதிர்ச்சிக்கு ஆளாயினர். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகின்றது.

இந்த சூழலில் சென்னையில் இன்று காலை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வருமாறு பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 106 ரூபாய் 69 காசுகளுக்கும், டீசல் 70 காசுகள் அதிகரித்து 96 ரூபாய் 76 காசுக்குக்கும், விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள்