10-3-2022 இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

0
61

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதற்கான அனுமதியை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில், அதன்படி நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.

இதற்கு நடுவில் கடந்த 125 நாட்களாக ஒரே விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யபட்டு வருகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை ஒரு லிட்டருக்கு 91ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த சூழ்நிலையில், 126 ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் அதே நிலையில் நீடித்து வருகிறது.