நீண்ட நாட்களாக அசையாத பெட்ரோல் டீசல் விலை நிலவரம்! காரணம் என்ன தெரியுமா?

0
129

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

அதனடிப்படையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. இதன் காரணமாக, தினம்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், எப்போதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. ஆனால் தற்சமயம் 70க்கும் மேற்பட்ட நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருக்கிறது. இதற்கு ஒருசில காரணங்கள் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள்.

அதாவது விரைவில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக விளங்கும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேர்தல் வரவிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் வைத்திருக்கிறது என்றும் ஒரு சில கருத்துக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

ஏனெனில் அந்த உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடித்து விட்டால் மத்தியில் சுலபமாக ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்பதே தேசிய தலைவர்களின் எண்ணம் அதுவே உண்மையாகவும் இருந்திருக்கிறது.

இதற்கிடையில் கடந்த 77 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ரூபாய் 45 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், 78வது நாளாக தலைநகர் சென்னையில் இன்றைய தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருக்கிறது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 101 ரூபாய் 40 காசுக்கும், டீசலின் விலை ஒரு லிட்டர் 91 ரூபாய் 43 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.