கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு! தமிழகத்தில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு அண்ணாமலை கொதிப்பு!

0
52

கோவை சித்தாபுதூர் பகுதியில் நேற்று இரவு பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டில் வீசப்பட்டது. அப்போது கட்சியின் பிரமுகர்கள் சிலர் தரைதளத்திற்கு முன்பு நின்று கொண்டிருந்தார்கள்.

அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், தாங்கள் வைத்திருந்த பாட்டிலை தூக்கி கட்சி அலுவலகத்தை நோக்கி வீசிவிட்டு வேகமாக தப்பிச் சென்றார்கள்.

பாஜக அலுவலகத்திற்கு பக்கத்தில் உள்ள மின்கம்பம் மீது விழுந்தது இந்த பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை. இதன் காரணமாக, யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை. அதேபோன்று கோயமுத்தூர் ஒப்பணக்கார வீதியில் இருக்கின்ற துணி கடை மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இது தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள், அதோடு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து சந்தேகத்தின் பெயரில் மூன்று பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது இந்த சம்பவத்தை கண்டித்து பாஜகவை சார்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோயமுத்தூர் பாஜக அலுவலகம் அருகே பெற்றோர் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு பாஜகவின் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில் மாநில பாஜகவின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வலைதள பதிவில் கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

நம்முடைய சமூகத்திற்கும் நாட்டிற்கும் விரோதமான இந்த சக்திகளுக்கு எதிராக கடுமையாக போராடுவதற்கான நம்முடைய உறுதியை இந்த சம்பவம் வலுப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் திமுக அரசின் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் புதிய அடித்தளத்தை எட்டுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற அச்சுறுத்தல்கள் சமூக விரோதிகளுக்கு எதிரான எங்களுடைய சமூக பணியை மேலும் துரிதப்படுத்தும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர்ந்து கொள்ள வேண்டும், என்று அந்த பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here