திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன!

0
69
Petition for unmarried woman abortion! What is the order of the Supreme Court!
Petition for unmarried woman abortion! What is the order of the Supreme Court!

திருமணம் ஆகாத பெண் கருக்கலைப்பு கோரி மனு! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்ன!

மணிப்பூரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பி ஏ படிப்பு படித்து வரும் நிலையில் திருமணம் ஆகாத நிலையில்  கருவுற்ற நிலையில் கடந்த ஜூலை 16ஆம் தேதி தான் கருவுற்று இருப்பது தனக்குமெனவேதனை ஏற்படுத்துவதாகவும் தற்போது நான் தயார்வதற்கு மனதளவில் தயாராகவில்லை எனவும் கூறி இந்த கர்ப்பத்தை கருக்கலைப்பு செய்ய வேண்டும் எனவும் அதற்காக அனுமதிக்கோரி மனு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை  விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஸ் சந்திர சர் மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒருமித்த உறவின் காரணமாக பெண் கருவுற்றதையும் திருமணம் ஆகாத பெண்ணுக்கு சட்ட வீதிகளின்படி கருகலைப்பு அனுமதி வழங்க முடியாது என்று சுட்டிக்காட்டி கருகலைப்புக்கு அனுமதி வழங்க மறுத்தனர். மேலும் மருத்துவ கருக்கலைப்புச் சட்டத்தின் படி 20 முதல் 24 வாரங்களுக்குள் விருப்பப்படும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம் எனவும் இந்நிலையில் முன்னதாக தான் 23 வார கருவை கலைக்க திருமணமாகாத இளம் பெண் அனுமதி வழங்கி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அந்த மனுவை ரத்து செய்ததையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பெண் உச்சநீதிமன்றத்தில் முன்னதாக மேல்முறைய செய்திருந்தார். இந்தவழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் திருமணம் ஆன பெண்களுக்கு மட்டும் இருவது வாரங்களுக்கு மேல் கரு கலைப்பு செய்யும் உரிமை வழங்கப்பட்ட நிலையில் மனுதாரர் ஆன திருமணமாகாத பெண்ணுக்கு இந்த சலுகை மறுக்கப்பட கூடாது எனவும் கூறினார்கள்.

மேலும் மருத்துவ கருக்கலைப்புச் சட்டத்தின் விதிகளின்படி இது குறித்து மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் இயக்குநரைக் கேட்டுக் கொண்டுள்ள உச்ச நீதிமன்றம் பெண்ணின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் கருவை கலைக்க முடியுமானால் எய்ம்ஸ் அதனை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் இந்த பெண்ணை பரிசோதித்த நிலையில் நீதிபதி டி ஓ சந்திர சூட் தலைமையிலான அமர்வு திருமணமாகாத பெண்ணை அவர் கோரிக்கையின் கரு கலைப்புக்கு அனுமதிக்காமல் இருப்பது மருத்துவ கருகுலப்பு சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது கூறினார்.

மேலும் இது தவிர 2003 ஆம் ஆண்டு மருத்துவ கருக்கலைப்புச் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் விளக்கத்தில் கணவன் என்னும் சொல்லுக்கு பதிலாக பார்ட்னர் எனும் வார்த்தையை பயன்படுத்துவதையும் இச்சட்டத்தின் கீழ் திருமணமாகாத பெண்களையும் உள் கொண்டு வருவதற்கான சட்டத்தின் நோக்கத்தையும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிவுள்ளது.

author avatar
Parthipan K