ஆன்லைனில் மது விற்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!!

0
103

ஆன்லைன் மூலமாக மது ஆர்டர் செய்யும் மக்களுக்கு வீட்டிற்கு சென்று டெலிவரி செய்ய டெல்லி அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா என்ற எமனின் பிடியில் சிக்கி துக்கத்தில் ஆழ்த்தி வருகிறது. கொரோனாவின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வரும் நிலையில் பல மாநிலங்கள் கொரோனாவின் பரவலைத் தடுக்க ஊரடங்கு விதிக்கப்பட்டு வருகின்றன.

அதேபோல் டெல்லியிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டே தான் செல்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் அரசு பல கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியது.

அதன்படி அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதி வழங்கியது. மருந்தகங்கள் மற்றும் பால் மளிகை கடை உள்ளிட்ட அத்தியாவசியமான கடைகள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

மக்கள் பெரும் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதற்கு இந்த மதுபான விற்பனைக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டிருந்தது. மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் மிகவும் வேதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர். அதனால் டெல்லி அரசு ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

மது பிரியர்கள் வேண்டுகோளுக்கு இணங்க டெல்லி அரசு ஆன்லைன் மூலமாக மது விற்பனை செய்யலாம் என அனுமதி கொடுத்துள்ளது. அதனால் மது வாங்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்தபடியே அதற்கான மொபைல் எண் அல்லது செயலி இருந்தால் அதனை பயன்படுத்தி ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி அனைத்து மது கடைக்காரர்களும் இந்த விற்பனையில் ஈடுபடும் முடியாது என்றும் , எல்- 13 என்ற சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே மொபைல் செயலி அல்லது ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்பவர்களுக்கு உபயோகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது.

author avatar
Kowsalya