சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி – தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வலியுறுத்தல்

0
73

கொரோனாவின் கோரப்பிடியில் கடந்த மூன்று மாதங்களாக பொதுமக்கள் கூடும் பொது இடங்களும், கேளிக்கைகள், திரையரங்குகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால், திரையுலகில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படத்துறையிலும் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அது சார்ந்த தொழிலாளர்கள் என அனைவரும் பொருளாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியாவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த ஊரடங்கு சூழலில் ஓடிடி தளத்தில் படங்கள் வெளியானதை தடுக்க முடியவில்லை.

திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பையும் மீறி நேற்று ஓடிடியில், மறைந்த பாலிவுட்  நட்சத்திரமான சுஷாந்த் சிங் நடித்த தனது கடைசி படம் “தில் பெச்சாரா” வெளியானது. சமீபத்தில் தமிழில் “பெண்குயின்” மற்றும் “பொன்மகள் வந்தாள்” போன்ற திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானது. இன்னும் மேலும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களும் ஓடிடியில் வெளியிட உள்ளன. இது மேலும் திரையரங்க உரிமையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்டில் திரையரங்குகளை திறப்பதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதனை இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை சார்பாக நடந்த கருத்தரங்கு கூட்டத்தில், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அமித் கரே உறுதி செய்துள்ளார்.

அடுத்த மாதம் ஆகஸ்ட் 1லிருந்து 31க்குள் திரையரங்குகள் திறப்பதற்கு அந்தக் கூட்டத்தில் தான் பரிந்துரை செய்ததாக தெரிவித்துள்ளார். இதில் திரையரங்குகள் விதிமுறைகளுடன் தனிமனித இடைவெளி கொண்டு ஒவ்வொரு சீட் வரிசையிலும் இரண்டு மீட்டர் இடைவெளிவிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதனை கூட்டத்தில் கலந்துகொண்ட திரையரங்க அதிபர்கள் அமைச்சர் அமித் கரே கூறிய நிபந்தனைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், 25 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திரையிடுவது, திரையரங்குகளை மூடி இருப்பதை விடவும் மோசமானது என்றும் அவர்கள் கூறி எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

author avatar
Parthipan K