5 நாட்களுக்கு பிறகு அனுமதி! அரோகரா கோஷத்துடன் கோவிலுக்குள் நுழைந்த பக்தர்கள்!

0
123

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் நோய் தொற்று பாதிப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக, கடந்த வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் வர்த்தகம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் பொங்கல் பண்டிகையை என்னவாக இருந்த கடந்த 14ஆம் தேதி முதல் தைப்பூசத் திருவிழாவில் நேற்று முன்தினம் வரையில் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்ற காரணத்தால், கடந்த 5 ஐந்து நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதனடிப்படையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 5 நாட்களாக பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது, நேற்று முன்தினம் பக்தர்கள் இன்றி தைப்பூச திருவிழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.

அதனடிப்படையில் இந்த ஐந்து நாட்களில் விதிக்கப்பட்டிருந்த தடை முடிவடைந்ததால் நேற்றுமுதல் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது, இதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தார்கள் இதன் காரணமாக, கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் தலையாக காணப்பட்டது. இதனை முன்னிட்டு கோவில் நடை அதிகாரிகள் திறக்கப்பட்டது தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன.

அதோடு பாதயாத்திரை, வாகனங்களில் வந்த திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடி மிக நீண்ட வரிசையில் சுமார் 3️ மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தார்கள், மேலும் ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள் பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்திக் கடன்களை செலுத்தி இருக்கிறார்கள், பலர் அங்கபிரதட்சணம் செய்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

பழனி முருகன் கோவிலில் அதிகாலை முதலே நுழைவு பாதையான குடமுழுக்கு அரங்கம் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி இருந்தது, கோவிலை திறந்தவுடன் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, என்ற கோஷம் எழுப்பியபடி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

படிப்பதை, கிரிவீதி, வெளிப்பிரகாரம், உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பக்தர்கள் குவிய தொடங்கினார்கள். அதோடு ரோப்கா,ர் மின் இழுவை, ரயிப் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தார்கள் ஆகவே 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நேர்ந்ததாக சொல்லப்படுகிறது.