முடிவுக்கு வருமா நீட் தேர்வு தற்கொலைகள்? இன்று சட்டசபையில் சட்ட மசோதாவை தாக்கல் செய்யும் முதலமைச்சர்!

0
62

நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்ததிலிருந்து திமுக அதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது திமுக மட்டுமல்லாமல் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், மதிமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இதனை கடுமையாக எதிர்த்து வந்தனர்.அதோடு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளிடம் பரிசோதனை என்ற பெயரில் சில விரும்பத்தகாத செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு பரிசோதனையின்போது மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் மாணவ, மாணவிகள் தெரிவித்தார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த நீட் தேர்வை எழுதியவர்கள் பெரும்பாலும் வட இந்திய மாணவர்கள் தான் அதில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் இதில் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் இந்த தேர்வில் தோல்வி அடைந்து விரக்தியின் காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.கடந்த 2017 ஆம் ஆண்டு அரியலூர் மாவட்டம் குழுமுர் பகுதியை சார்ந்த அனிதா என்ற மாணவி ஒருவர் இந்த நீட் தேர்வில் தோல்வியடைந்தால் அதன் பின்னர் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்தார். ஆனால் அவருக்கு போதுமான பக்கபலம் இல்லாததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.

முடிவில் அவர் எடுத்த ஒரு அதிரடி முடிவு ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டம் காண வைத்தது. அதாவது மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார் இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் முதல் விஜயகாந்த் வரை அனைவரும் அந்த மாணவியின் இறுதிச்சடங்கில் நேரடியாகவே வந்து பங்கேற்றார்கள்.அப்போது இந்த நீட் தேர்வுக்கு எதிராக பல கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது. அப்போதிருந்தே திமுக இந்த நீட் தேர்வை மிக கடுமையாக எதிர்த்து வந்தது.
அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம் என்று தேர்தல் அறிக்கையிலும் கூட திமுக உறுதிபட தெரிவித்து இருந்தது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு நியமனம் செய்தது. அந்த குழு இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை தயார் செய்து தமிழக முதலமைச்சர் இடம் கொடுத்திருக்கிறது. இதனடிப்படையில் மருத்துவக்கல்வி சேர்க்கையில் அனைத்து நிலைகளிலும் நீட்தேர்வு புரிந்துகொள்வதற்கு புதிய சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற முயற்சி செய்யலாம் என்று அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழக பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடர் இன்று முடிவடைய இருக்கின்ற நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் தாக்கல் செய்ய இருக்கின்றார். இன்றைய தினமே இந்த சட்ட மசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது சட்டசபையில் உடனடியாக நிறைவேற்றப்படவும் இருக்கிறது. அதன் பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கிறார்கள்.