மக்களவையில் இருக்கும் அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு உறுப்பினர் யார் ?ஸ்டாலின் அதிரடி!

0
58

சமீப காலமாகவே திமுகவில் குடும்ப அரசியல் நடைபெற்று வருவதாக பலவிதமான குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பயணத்தை மக்கள்தான் முடிவு செய்வார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் உதயநிதியின் அரசியல் பயணம் தொடர்பாக தீர்மானிக்கப் போவது நான் கிடையாது. தமிழக மக்கள் தான் அவருடைய அரசியல் பிரவேசத்தை முடிவு செய்வார்கள் என்னுடைய மகனுடைய அரசியல் பயணம் என்பது அவருடைய செயல்கள் மற்றும் தமிழக மக்கள் அவரை பற்றி இந்த மாதிரியாக நினைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து தீர்மானம் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்வரும் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவதற்கான வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கேட்கப்படுகின்றது. திமுகவில் நேர்மையாகவும் முழுமையான அர்ப்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்டு வரும் மனிதர்களுக்கு இன்றுவரையில் மதிப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது. இன்று நான் இருக்கும் ஒரு இடத்திற்கு வரவேண்டும் என்பதற்காக நான் திமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து சுமார் 50 ஆண்டுகாலம் பணிசெய்து வந்திருக்கின்றேன். உதயநிதி ஸ்டாலின் மற்ற திமுகவின் உடன்பிறப்புகளை போலவே கடுமையான உழைப்பிற்கு பிறகு அனைத்தையும் கற்றுக் கொண்டு அவர் மேலே வரவேண்டும் என நினைக்கின்றேன் என்று தெரிவித்திருக்கிறார்.

வாரிசு அரசியல் என என்னிடம் கேள்வியை முன் வைப்பவர்களுக்கு மக்களவையில் இருக்கக்கூடிய அதிமுகவைச் சேர்ந்த ஒரே ஒரு யோசித்துப் பாருங்கள் அவர் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத். அவருடைய மற்றொரு மகன் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கொடுத்திருக்கின்றார் என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் பிசிசிஐல் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார். இதைப்போல அனேக எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கின்றார் ஸ்டாலின்.

தற்போது ஆண்டு கொண்டிருக்கும் அதிமுக மீதும், பாஜக மீதும், பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதிமுக மற்றும் அதனைச் சார்ந்த அமைச்சர்கள் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய பட்டியலை இரண்டு முறை ஆளுநரிடம் கொடுத்தபோதும் இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிமுக அமைச்சர்கள் பல திட்டங்கள் செயல்படுகிறோம் என்று தெரிவித்து பொது பணத்தை கொள்ளை அடித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.

எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தை சுரண்டி திங்கும் அதிமுக மற்றும் அவர்களுடைய கூட்டணி வேட்பாளர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க முடியும் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்காக மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின்.