மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

0
84
People who will be pushed back into extreme poverty! Shocking information published in the study!
People who will be pushed back into extreme poverty! Shocking information published in the study!

மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

இந்தியாவின் 2021 பொருளாதார உற்பத்தியானது 2019 ஆம் ஆண்டை விட மிக குறைவாகவே இருக்கும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது மக்கள் கொரோனா தொற்று காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்களின் வேலைவாய்புகள் முடங்கி கிடந்தனர்.இதனால் இந்தியா அதிக அளவு பெருளாதார வீழ்ச்சியடைந்தது.

இதனால் இவர்கள் ஆய்வறிக்கையில் கூறியது,2021-2022 ஆண் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.7 சவீதமாக சரிவடையும் எனக் கூறினர்.இந்த பொருளாதார வளர்ச்சி 2019 ஆண்டை விட மிகவும் குறைவாக இருக்கும் என அந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.சீனா நாட்டில் முதலில் ஆரம்பித்து அதன்பின் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தொற்று பரவியது என்று கூறினாலும்.அந்த நாடு தான் விரைவிலேயே தொற்று பாதிப்பிலிருந்து வெளியே மீண்டு வந்தது.அதனால் அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2020 ஆண்டின் நான்காம் காலாண்டில் 6.5 ஆக இருந்தது.இந்த வளர்ச்சியானது தொற்றுக்கு முன்பியிருந்து வளர்ச்சியை இது முறியடித்தது.சீனாவில் பொருளாதாரம் இன்னும் அதிக அளவு மேம்படும் எனக் ஆய்வறிக்கையில் கூறுகின்றனர்.

கொரோனா தொற்றுநோய் காரணமாக பிராந்தியத்தில் கூடுதலாக 8.9 கோடி மக்கள் மீண்டும் வறுமை கோட்டிற்கு செல்வார்கள்.இது ஒரு நாளைக்கு இந்திய கணக்கின்படி பார்த்தால் ஒர் நாளில் ரூ.145 குறைவான பணத்தில்  வாழ்க்கையை நடத்தக் கூடும் என ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

1947 ஆண் ஆண்டு முதல் இந்த ஆணியம் ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.அதில் இந்தியா,வங்களாதேசம்,பூட்டான்,ஈரான்,ஆஸ்திரேலியா,ஜப்பான்,நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த ஆய்வு அறிக்கை வருடம்தோறும் ஆய்வு நடத்தும் என தெரிவித்துள்ளனர்.