மக்களே உங்கள் செல்லப் பிராணிகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்:?நாயையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்

0
83

உலக நாடுகளில் அச்சுறுத்திவரும் கொரோனா கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவை தாக்க தொடங்கியது. கொரோனா நோய் தொற்றால் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருவதை நம் தினமும் செய்தியின் மூலம் கேட்டிருப்போம்.இந்த நோய்க்கான தடுப்பூசி தயாரிக்கும் முறையில் அந்தந்த நாட்டு மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நோயால் மனிதர்கள் பலர் நோய் தொற்றுக்கு ஆழகி உயிரிழந்துள்ளனர்.ஆனால் அமெரிக்காவில் கொரோனா நோயால் நாய் பாதிக்கப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிசன் மஹோனி தம்பதியர்களின் செல்லப்பிள்ளையாக இருந்து வந்த 7 வயதாகிய ஜெர்மன் செப்பர்ட் வகை நாய் ஒன்று, கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் இந்நோயால் பாதிக்கப்பட்ட முதல் விலங்கு இந்த நாயே ஆகும்.

இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் , ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் நாசிலில்சளி தேங்கியும்,மூச்சுவிட சிரமப்பட்டும், ரத்த வாந்தி எடுத்தும், அந்த நாய் பார்ப்பதற்கே கவலைக்கிடமாக இருந்தன.இந்நிலையில் தற்போது அந்த நாய் உயரிழந்துள்ளது.

இந்த நாய் உயிரிழந்ததற்கு கொரோனா மட்டுமே காரணம் என கூறமுடியாது என்று கால்நடை மருத்துவர்கள் கூறியுள்ளனர்.அந்த நாய்க்கு ரத்தப்பரிசோதனை எடுத்தபோது லிம்போமா புற்றுநோய் இருந்திருக்கலாம் எனவும் கால்நடை மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி அமெரிக்காவில் இன்னும் 12 நாய்கள், பத்து பூனைகள், ஒரு புலி மற்றும் ஒரு சிங்கம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

author avatar
Parthipan K