ஒரு நல்ல விசயத்திற்கு மக்கள் ஆதரவு! ஒரே ஒரு வீடியோ செய்த வேலை!

0
75
People support a good cause! Only one video made work!
People support a good cause! Only one video made work!

ஒரு நல்ல விசயத்திற்கு மக்கள் ஆதரவு! ஒரே ஒரு வீடியோ செய்த வேலை!

ஒரு நபர் ஹைதராபாத்தில் உணவை ஆர்டர் செய்துள்ளார். அந்த நபரின் பெயர் ராபின் என்பதாகும். அந்த உணவோ அவரது வீட்டு வாசலுக்கு 20 நிமிடங்களில் வந்து சேர்ந்துள்ளது. இதை பார்த்த ஆர்டர் செய்த நபருக்கோ ஒரே அதிர்ச்சி.

ஏனெனில் உணவு ஆர்டர் கொடுத்த இடத்தில் இருந்து உணவகம் இருந்த இடம் அவ்வளவு தூரமாம். அதுவும் 9 கி.மீ இருந்த தொலைவை வெறும் 20 நிமிடங்களில் ஒரு நபர் கடந்து வந்துள்ளார். அவர் வந்த வாகனத்தை பார்த்த ராபின் அவரை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன் பின் டெலிவரி கொடுக்க வந்த இளைஞரிடம் பேச்சு கொடுத்தார். அவரி பெயர் முகமது அகில் என்றும், மேலும் தான் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேரம் வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

இதை ராபின் உடனடியாக இணையத்திலும் பகிர்ந்தார். அப்போது அவர் இதையும் குறிப்பிட்டு இருந்தார். நான் சொமட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். என்னுடைய ஆர்டரை முகமது அகில் மின்னல் வேகத்தில் கொண்டு வந்து டெலிவரி செய்தார். ஏனென்றால், என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் செய்யும் போது முகமது, மெஹதிபுட்னத்தில் இருந்தார்.

நிலோஃபர் லக்திகாபுல் பகுதியில் என்னுடைய ஆர்டர் கன்ஃபார்ம் ஆகி, அதனை கிங் கோட்டி பகுதியில் டெலிவரி செய்தார். கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து வந்த அவர், நான் ஆர்டர் செய்த டீ சூடாகவே இருந்தது. முகமது இப்போது பொறியியல் படித்து வருகிறார். எல்லாமே இந்த சைக்கிளால் தான் சாத்தியமாகிறது. இவருக்கு உதவி செய்யலாம் என நினைக்கிறேன் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதுவும் முகமது அகிலுக்காக சுமார் 10 மணி நேரத்தில் 73000 ருபாய் வரை நிதி உதவி கிடைக்கப் பெற்றது.

People support a good cause Only one video made work

கிடைத்த நிதியில், அகிலுக்காக ராபின் ரூ.65000 மதிப்புள்ள டி.வி.எஸ். பைக் ஒன்றை புக் செய்து வாங்கி கொடுத்தார். மேலும் இது பற்றி இணையத்தில் பகிர்ந்த அவர் அகிலுக்கு ஒரு பைக்கும், ரெயின் கோட், மற்றும் ஹெல்மெட் வாங்கி உள்ளதாகவும், மீதமுள்ள பணத்தை அகிலின் படிப்பு செலவுக்கு கொடுப்பதாகவும் கூறினார்.

மேலும் அவர் உதவி செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்து இருந்தார்.