முடக்கநிலையை எதிர்த்துப் போராடும் மக்கள்

0
61
உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. இந்த வைரசுக்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து நாடுகளிலும் பாதி சேவைகள் முடக்கத்தில் உள்ளன. அந்த வகையில்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா நோய்ப்பரவலை முன்னிட்டு விதிக்கப்பட்ட முடக்கநிலையை எதிர்த்துப் போராடியோரைக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கிட்டத்தட்ட ஐந்து வாரங்களாக அங்கு நிலவும் முடக்கநிலை காரணமாக கிருமித்தொற்றுச் சம்பவங்கள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன.

author avatar
Parthipan K