கொரோனா தடுப்பூசியை உபயோகிப்பதில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் – உலக நலவாழ்வு நிறுவனம் தகவல்!

0
79

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது பல முக்கிய நாடுகளில் இந்த தடுப்பூசியானது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நம் நாட்டிலும் அவசரகால பயன்பாட்டிற்கு இந்த கொரோனா தடுப்பூசியானது மக்கள் பயன் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து உலக நலவாழ்வு நிறுவனத்தின் உதவி இயக்குனராக பணிபுரியும் மரி ஏஞ்சலா சிமாவோ அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:

“இந்த கொரோனா தடுப்பூசியை மக்கள் அனைவரும் எவ்வித பயமும் இன்றி உபயோகிக்கலாம் என்று கூறியுள்ளார். இந்த தடுப்பூசியை அனைத்து நாடுகளில் வசிக்கும் அனைத்து மக்களும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்துடன் இந்த கொரோனா தடுப்பூசியை அனைத்து மக்களும் போட்டுக் கொள்வதை உறுதி செய்வதற்கு பாடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். உலகில் இருக்கும் 50 முன்னணி நாடுகளில் தடுப்பூசி இயக்கம் தொடங்கி இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த நாடுகளில் 40 நாடுகள் உயர் வருமானம் உள்ள நாடுகள் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்”.

author avatar
Parthipan K