மாநகராட்சி நிர்வாகத்தால் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள்? நடுரோட்டில் நாற்று!

0
89
people-protesting-by-corporation-administration-seedling-in-the-middle-of-the-road
people-protesting-by-corporation-administration-seedling-in-the-middle-of-the-road

கோவையில் ரத்தினபுரி அடுத்த சங்கனூர், நல்லாம்பாளையம் பகுதியில், பழுதடைந்த சாலையை சரி செய்ய கோரி பொதுமக்கள் குண்டும் குழியுமான சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருக்கும் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியின் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் ரத்தினபுரி, சங்கனூர் முதல் நல்லாம்பாளையம் வழியாக சுற்றி வருகின்றது.

மேலும் இந்த பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குண்டு குழிகள் உருவாகி உள்ளன. இப்போது அந்த குழிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்களில் வரும் மக்கள் இரவு நேரங்களில் விபத்திற்குள்ளாகின்றனர் .

தொடர்கதையாக நடைபெற்று வரும் இந்த சாலை விபத்துகளை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த பகுதியில் சரியான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் மாநகராட்சி நிர்வாகம் எந்த வித செயலையும் செய்யாததால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் அனைவரும் தேங்கிய மழைநீரில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டன.

மேலும்,இதில் சுமார் 20 க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு குண்டும் குழியுமான சாலையில் நாற்றுக்களை நட்டு தங்களதுபெரும் எதிர்ப்பை தெரிவுபடுத்தினர்.

author avatar
Parthipan K