வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை

0
154
MK Stalin-News4 Tamil Online Tamil News Today
MK Stalin-News4 Tamil Online Tamil News Today

வட மாவட்டங்களில் தொடர்ந்து விரட்டியடிக்கப்படும் திமுக! உச்சகட்ட குழப்பத்தில் திமுக தலைமை

வடமாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்ற திமுகவை அங்கு நுழையவிடாமல் மக்கள் தொடர்ந்து விரட்டி அடிப்பதால் அக்கட்சியின் தலைமை கடுமையான அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.முன்பு எப்போதும் இல்லாதது போல இந்த முறை எக்காரணம் கொண்டும் திமுக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கத்தில் பல கோடி செலவு செய்து பிரசாந்த் கிஷோர் என்ற அரசியல் ஆலோசகரை தங்களுடைய பிரச்சாரத்தை கவனித்து கொள்ள நியமித்துள்ளது.இந்நிலையில் தான் அரசியல் ஆலோசகரின் திட்டப்படி சென்ற திமுகவினரை வட மாவட்டங்களில் ஆங்காங்கே மக்கள் விரட்டி அடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல துவங்கி விட்டார்கள்.இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டதே என்றே சொல்லலாம். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் மற்றும் இதர திமுக தலைவர்களும் களத்தில் சென்று மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

MK Stalin News4 Tamil Latest Online Tamil News Today
MK Stalin-News4 Tamil Latest Online Tamil News Today

பல இடங்களில் திமுகவுக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இருந்தாலும் சில இடங்களில் அவர்களுக்கு எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் குறிப்பாக வட தமிழகத்தில் அதிகமான எதிர்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறார்கள்.இதற்கு காரணமாக திமுகவின் சமீபக கால செயல்பாடுகள் தான் என்று அரசியல் ஆலோசகர்கள் கூறுகின்றனர்.வருடம் முழுவதும் திராவிட கொள்கை,கடவுள் மறுப்பு மற்றும் சாதி ஒழிப்பு என்று பேசிவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் சாதி மற்றும் மத அடிப்படையில் இவர்கள் மக்களை அணுகுவதால் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அக்கட்சிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதன் அடிப்படையில் தான் தருமபுரி எம்.பி செந்தில்குமாரை அவரது சொந்த தொகுதியான தருமபுரி மாவட்டத்தில் உள்ள நத்தமேடு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது அங்குள்ள வன்னிய இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகள் குடும்பத்துக்கு ஒரு லட்சம் தரப்போவதாக ஊருக்குள் சென்றார்.ஆனால் அங்குள்ள மக்கள் அவரை ஊருக்குள் நுழையவிடாமல் விரட்டி அடித்துள்ளார்கள்.இதற்க்கு காரணம் பாமகவினர் என திமுக தரப்பு குற்றம்சாட்டியிருந்தாலும்,இதற்கு முதன்மையான காரணம் செந்தில்குமார் எம்பி அவர்களின் கடந்த கால செயல்பாடுகள் தான் என்கிறார்கள் அந்த ஊர் பொது மக்கள்.

குறிப்பாக அவர் தொடர்ந்து மருத்துவர் ராமதாஸையையும், வன்னிய மக்களின் சின்னமான அக்னி கலசத்தையும் இழிவாக பேசியது அங்கு வாழும் வன்னிய மக்களிடையே கட்சி கடந்து அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறுகின்றனர். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு ஊருக்குள் வந்தார் அதுக்கு பின்னர் மறுபடியும் தற்போது சட்டமன்ற தேர்தலுக்கு தான் வருகிறார், மேலும் எங்கள் கிராமத்துக்கு எந்தவித நலத்திட்டமும் சொய்யவில்லை இதனால் தான் அவரை ஊருக்குள் நுழையவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே தயாநிதி மாறன் எம்.பி அவர்களையும் பிரச்சாரத்திற்கு வர விடாமல் பாமகவினர் தடுத்துள்ளது திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.

அதாவது சேலம் மாவட்டம் ஓமலூரில் “ஸ்டாலின் குரல்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற தயாநிதி சென்ற வாகனத்திற்கு பின் வந்த கார் கண்ணாடிகளை உடைத்ததுடன் மட்டுமல்லாமல்,அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியும் பாமகவினர் போராட்டம் செய்துள்ளார்கள்‌. இதனால் சற்று நேரம் அங்கே பரபரப்பு ஏற்பட்டதால், பிறகு அங்கு வந்த காவல்துறை போராட்டகாரர்களை சமாதனபடுத்தி போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.

இந்நிலையில் தயாநிதிமாறனுக்கு எதிராக பாமகவினர் ஏன் இவ்வாறு போராட்டம் செய்தார்கள் என்று விசாரித்த போது, சேலத்திற்கு பிரச்சாரத்திற்காக சென்ற தயாநிதி மாறன் அங்கு பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கும் போது பத்திரிக்கையாளர் ஒருவர் பாமகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திப்பீர்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த தயாநிதி மாறன் பாமகவுக்கு பேரம் பேசி காசு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் காசு இல்லை என்றும், பாமகவானது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன்‌ கூட்டணி சேர்ந்த போது பேரம் பேசி 400 கோடி வாங்கினார்கள் என்றும் தயாநிதி மாறன் எந்த ஆதாரமும் இல்லாமல் விமர்சனம் செய்துள்ளார்.

ஆனால் திமுக தலைமையோ அதன் கூட்டணி கட்சிகளான கம்யூனிஸ்ட்,மதிமுக,கொங்குநாடு முன்னேற்ற கழகம் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு கோடி கணக்கில் பணம் கொடுத்ததை தேர்தல் ஆணையமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் எந்த ஆதாரமும் இல்லாமல் பாமக பணம் வாங்கியதாக அவர் எப்படி கூறலாம் என்ற அடிப்படையில் தான் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அப்பகுதியிலுள்ள பாமக தொண்டர்கள் கூறுகின்றனர்.மேலும் அவர் நாங்கள் நடத்தும் இட ஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசியதால் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தோம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

author avatar
Parthipan K