மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

0
55

மக்களே தயவுசெய்து இந்த தவறை செய்து விடாதீர்கள்:! ஒரே ஃபோன்காலில் ரூ 2.2 லட்சம் கொள்ளை!

சிம் ஸ்வாப் மோசடி மூலம் ஒரு பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 2.2 லட்சம் ரூபாயை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு புதிய நம்பரில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த அழைப்பில் பேசியவர்கள் நீங்கள் இன்னும் 3ஜி சிம் கார்டுதான் பயன்படுத்துகிறீர்கள் என்றும், உடனடியாக 4ஜி கார்டுக்கு மாறாவிட்டால் உங்கள் சிம் செயலிழக்க செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிம் செயல் இழக்காமல் இருக்க வேண்டுமென்றால்,
உங்கள் தொலைபேசி எண் குறித்த முழு விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றும்,மேலும் உங்களது போனிருக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அந்த குறுஞ்செய்தியில் உள்ள இருபது இலக்கு குறியீட்டை கிளிக் செய்ய வேண்டுமென்றும் எதிர் தரப்பில் பேசியவர் கூறியிருக்கின்றனர்.
இதனை நம்பிய அப்பெண்மணி, அவர்கள் கேட்ட தொலைபேசி விவரத்தையும் அவர்கள் அனுப்பிய 20 இலக்க குறியீட்டையும் கிளிக் செய்து உள்ளார்.அந்த லிங்கை கிளிக் செய்தவுடன்,அந்தப் பெண்ணின் சிம் கார்டு செயல் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து மோசடிக்காரர்கள் வைத்திருக்கும் குளோன்
சிம்கார்டில்,அந்தப் பெண்ணின் போன் நம்பரை பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர்.அவரது வங்கிக் கணக்கில் இருந்து
ரூ.2.2 லட்சத்தை கொள்ளை அடித்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பெண்மணி செய்வதறியாமல் புனேவின் அலங்கார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த வழக்கு குறித்து புகாரினை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர் இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கூட்டத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.இந்த மோசடி சம்பவத்திற்கு பின்னால் சிம்ஸ்வாப் முறை தான் இருக்கும் என்று காவல்துறை சார்பில் கூறப்படுகிறது.

ஆங்காங்கே பேங்கில் இருந்து கால் பண்ணுவதாகவும்,சிம் நெட்வொர்க்கிலிருந்து கால் பண்ணுவதாகவும் கூறி மக்களின் தகவல்கள் திருடப்பட்டு, பணம் கொள்ளையடிக்கும் சம்பவம் அரங்கேறியதான் வருகின்றது. இருந்தபோதிலும் மக்களுக்கு,சரியான விழிப்புணர்வு
கிடைக்கப்படவில்லை
என்பதுதான் நிதர்சனமான உண்மை.எனவே இதுபோன்று ஏதாவது உங்கள் தகவலை கேட்டு போன் வந்தால், அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் அந்த போன் அழைப்பை கட் செய்து விடுவது நல்லது.இனிமேலாவது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

author avatar
Pavithra