தமிழக மக்களே! இன்று இதை செய்ய மறந்து விடாதீர்கள்!

0
74

நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு இலவச அரசின் மலிவு விலையில் சர்க்கரை, கோதுமை, பாமாயில், போன்ற சமையல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, பயனாளிகள் பயனடைந்து வருகிறார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் அரசின் நிதி உதவியும் இந்த நியாய விலைக் கடையின் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், புதிதாக பலரும் ரேஷன் அட்டைக்கு விண்ணப்பம் செய்து வருகிறார்கள்.

ஒரு சிலர் ரேஷன் அட்டையில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பம் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ரேஷன் அட்டையை திருத்தம் செய்வதற்கு முன்பாக மாநில அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது ரேஷன் கடைகளில் வழங்கும் அத்தியாவசிய பொருட்கள் தரமற்றதாக இருக்கிறது என்று சிலர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

ஆகவே இதனை உடனடியாக தமிழக அரசு நேரடியாக தலையிட்டு இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்வதற்கு சென்னையிலுள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தாலுக்காவிலும் மாதம்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.